பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இT சுரதா ஒர் ஒப்பாய்வு 27 கேள்வி: கவிதை ஆற்றல் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில்: பிறவியிலேயே ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்பதெல்லாம் பித்தலாட்டம். ஒரு பொருளையோ, அல்லது நிகழ்ச்சியையோ பார்த்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடுதல் என்ற பழக்கமும் எனக்குக் கிடையாது. எந்தப் பொருளைப் பற்றியும் உட்கார்ந்து சிந்தித்துத்தான் எழுதுவேன். பிள்ளை பெறவேண்டும் என்பதற்காகப் புணர்வதில்லை. அது போலக் கவிதை ஆவேசத்துக்காக எப்பொருளையும் பார்ப்பதில்லை. கேள்வி: கற்பனை ஆற்றல் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில்: கவிதைக்குக் கற்பனை தேவையில்லை. கண்ணாடி, எதிரில் உள்ள உருவத்தைத்தான்காட்டும், வேறு உருவத்தைக் காட்டுவதில்லை. உலகத்தை அப்படியே காட்டுவது தான் கவிதை. ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுச் சிந்திப்பது தான் கவிதைக் கொள்கை. நான் பச்சையப்பன் கல்லூரியில் பேசும்போது இக்கருத்தை வெளியிட்டேன். டாக்டர் மு.வ. இக்கருத்தைப் பாராட்டினார். கேள்வி: உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் என்ன?