பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சுரதா ஓர் ஒப்பாய்வு ثاني பள்ளக் கடலவள் பார்வைகளாம் - புதுப் பங்கயப் பூக்களே செங்கைகளாம் என்று குறிப்பிடுகிறார். வெள்ளிக்கிழமை பிறந்த தனால் சோதிட சாத்திரப்படி அவள் சிறப்புப் பெற்றவளாக இருக்கலாம். ஆனால் வேலிப் பருத்தியைப் போன்றவளாம் என்ற உவமையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேலிப் பருத்தி எந்தவிதத்தில் சிறந்தது? இந்த உவமையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் விடக்கூடாது என்று நான் பதார்த்த குணசிந்தாமணியை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். வேலிப் பருத்திக்கு உத்தாமணி’ என்ற வேறு பெயரும் உண்டு. 'உணவில் மணத்தைத் தருகின்ற உத்தாமணி யிலையால் வாதநோய், விஷம், ஜன்னி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், ததுர்வாதம், சுவாசநோய், பலவிதத் தடிப்புகள், அக்கினி மாந்தம் இவை நீங்கும்; தீபனமுண்டாம்' என்று வேலிப் பருத்தியின் குணம் கூறப்பட்டிருக் கிறது. இவற்றுள் எந்தப் பண்பை அப்பெண்ணுக்குப் பொருத்துவது? 'தீபனம் என்றால் பசி, வேலிப் பருத்தியிலையைத் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பசியெடுக்கும் என்பர். ஒருகால் இப்பெண் காதற் ப்சியைக் கிளப்பி விடுவதால், கவிஞர் இவள்ை வேலிப் பருத்திக்கு ஒப்பிடுகிறாரோ என்று நானே குழம்புகிறேன். சு - 5