பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சுரதா ஒர் ஒப்பாய்வு يوليو நெருக்கமாகப் பழகிய அன்பர்கள் யாரும் அழைக்கப் படவில்லை. இதைக்கண்ட கவிஞர் சுரதா குமுறுகிறார். அக்குமுறல் கொந்தளிக்கும் விருத்தப் பாடல்களாக வெளிவருகின்றது. மானுக்குப் பின்மான்கள் செல்ல வேண்டும் வால்குழைக்கும் நாய்சென்றால் சிறப்பு இல்லை தேனுக்கு வேண்டுவது பாலா? வண்ணான் துணிபிழிந்த தண்ணிரா? நிலவை ஏந்தும் வானத்தில் பறந்தென்ன கொசுவின் கூட்டம் வல்லுறு இருக்கையிலே? பலபேர் கூடிச் சேனையைப்போல் சென்றார்கள்; ஆனால் வாளைத் திருப்புகின்ற வீரர்மட்டும் விழாவில் இல்லை. மலையிருக்க வேண்டாமா குறிஞ்சி என்றால்? வயலிருக்க வேண்டாமா மருதம் என்றால்? தலையிருக்க வேண்டாமா உயிர் இருக்க? தமிழ்க்கவியின் உயிர்நண்பர், நெல்லையப்பர் நிலையென்ன? ஏன்அந்த விழாவில் இல்லை? நீண்டகடல் புதுச்சேரிக் கவிஞர் எங்கே? தலையாட்டிப் பொம்மைகளே, கனக லிங்கத் தமிழ்ப்பறையன் ஏன்வந்து சேரவில்லை? கவிஞர் கண்ணதாசனுக்கும் இவருக்கும் ஒருமுறை மோதல் ஏற்பட்டபோது, கண்ணதாசா! நீயோர் சாயும் சீசாt காற்றடித்த சேலையைப் போல் ஒதுங்கும் ராசா!