பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சுரதா கவிதைகள்

மரணம்

சிறந்தவர்கள் மரணத்தால் மறைந்த போதும்,

செத்தாரோ டவர்களை நாம் சேர்ப்ப தில்லை.

மறைந்தாலும் அவர்களை நாம் மறப்ப தில்லை.

மரணத்தை வென்றவர்கள் என்ப தாலே,

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.

- நீர்க்குமிழி'திரைப்பாடல்

தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை.

--நீர்க்குமிழி:திரைப்பாடல்

பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம்.

- --நீர்க்குமிழி:திரைப்பாடல்