உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சுரதா கவிதைகள்



விதவை

கணவனை இழந்த பெண்ணும்
கலமற்ற கடலும் ஒன்றே!


நாட்டின் விடுதலை

முத்தமிடும் புதுக் காதலர்க்கும் இன்று
        முக்கியம் நாட்டின் விடுதலைதான் _வீரச்
சத்தங் கொடுத்துப் புறப்படுவோம். போரில்
        சாவு வரினும் சிரித்திடு வோம்!


நாடு

ஊனாகி அந்த ஊனில்
        உயிரேறி வடிவம் பெற்று
நானாகித் தமிழ னாகி
        நடமாடும் என்னைத் தாங்கும்
தேனான நாடே! இன்பத்
        திருக்குறள் நாடே! நீல
வானேந்தும் நாடே உன்றன்
        மடியன்றோ எனக்குத் தொட்டில்

–நூல் : தேன்மழை