பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 67 is:

வாயிதழ்கள் நம்முகத்தின் வகுத்த லாகும். :

வளர்கரங்கள் நம்முடலின் வகுத்த லாகும்.

表 & 踏 ·

தாயென்றும் தந்தையென்றும் தங்கை யென்றும்

தம்பியென்றும் மகனென்றும் மனைவி யென்றும்

சேயென்றும் சொல்வதெல்லாம். சமுதா யத்தைச் சிதறாமல் காப்பாற்றும் வகுத்த லாகும்.

பெருக்கல்

செந்நீர்தான் போர்களத்தின் பெருக்க லாகும்.

சிந்தனைதான் உள்ளத்தின் பெருக்க லாகும். வெந்நீர்தான் எரிமலையின் பெருக்க லாகும்.

வெளிச்சந்தான் சூரியனின் பெருக்க லாகும். 恋 融 救火

தண்ணிர்தான் மண்முட்டை உலகத் தன்னைச் சாப்பிட்டு ஏப்ப மிடும் பெருக்க லாகும்.

கண்ணிர்தான் ஏழைகளின் துன்பந் தன்னைக்

காட்டிக்கொண் டிருக்கின்ற பெருக்க லாகும்.

கணக்கு

கடிகார மாகும். அந்தக்