உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 123 பீதாம்பரம்,மைனாவின் கடிதம் என்றென்றும் ஞாபகத்திற் காக இருக்க வேண்டுமென்று திருமபக் கேட்டார் அப்போது, தீச்சட்டி சிங்காரத்தைப்பற்றிக் கூறவேண்டிய அவசியம் அதிகாரிக்கு ஏற்பட்டது "சிங்காரத்தின்மீது போடப்பட்ட பழியை இந்தக் கடிதம்தான் மறுக்கிறது. அதனால் இது சில நாளைக்குப் போலீசாரிடம் தான் இருக்கவேண் டும் பிறகு உங்களிடம் திருப்பித் தந்து விடுகிறோம்" என விளசுகினார் தீச்சட்டி சிங்காரத்திற்கு தன்னைப் பற்றிய விபரங்கள் எப்படித் தெரியும்? அவன்மீது பழி எவ்வாறு சுமத்தப்படடது?" என்று பீதாம்பாம் அறிய விரும்பினார் ஆனால் அதிகாரியின் முன்னிலையில அவைகளை கேட்க விருபபவில்லை சிஙகார மும் பீதாம்பரமும் இருவரும் தனியே சந்தித்துப் பேச விரும்பினார் கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விபரம் தேவைப்பட்டது. அதனால் ஒருவரையறியாமல் ஒருவர். போலீஸ அதிகாரியை மட்டும் தனியே முதலில் அனுப்பிவிட வேண்டுமென்று தீர்மானித்தனர் ஆனால் அதிகாரி. சிங்காரம் தன்னோடு திருமபி . ஊருக்கு வரவேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தி, தற்கொலைக்கும் அவனுக்கும் எவ்வித சம்பந்தமுமிலலை யென் பதை நிரூபிக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலையையும் எடுத்துக்கூறி அவனையும் அழைத்துக கொண்டு பீதாம்பரத்திடம் விடைபெற்றுப் புறப்பட் டார். சிங்காரம், அந்தப் பூனைக்குட்டியை மீண்டும் ஒருமுறை ஆவலாகத் தூக்கி முத்தமிட்டு பிறகு அதை பீதாம்பரத்தின் கையிலே கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அண்ணன்மீது சுமத்தப்பட்டிருந்த பழி நீங்கிவிட்டதைக் கேட்டு கற்பூரம் மகிழ்ச்சிக கடலில் குதித்தாள ஊராரும் சிங்காரத்தைப பார்த்துத் தங்கள சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டனர். "பயந்தே விட்டேன் அண்ணா! உன்மீது போடப் பட்ட வீண்பழியை நம்பி, எங்கே பொன்மணி உன்மீது தவறான அபிப்பிராயம் கொண்டு விடுகிறாளோ என்று!'-கற்பூரம் மெது வாகப் பேச்சைத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/125&oldid=1703113" இலிருந்து மீள்விக்கப்பட்டது