உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மு. கருணாநிதி பொன்மணியா? அவள் எந்தக் காலத்திலும் என்மீது தவறான அபிப்பிராயம் வைக்க மாட்டாளே!"-சிங்காரம் சிரித்துக் கொண்டே சொன்னான். . ஓ, அந்த அளவுக்கு வந்து விட்டதா ? நான் இதற்குள் இவ்வளவு எதிர்பார்ககலியே .. ஏன். எதிர்பார்க்கல்லே... என்னை விடுதலை செஞ்சி வெளியே அனுப்பியதே அவள் தானே !" ஓகோகோ .. அப்படியா சங்கதி? அண்ணா! எனக்கு அது கூட ஆச்சரியமில்லே- உன் மேல பிடிச்ச பேய்கூட பொன்மணி கிட்ட வந்ததும் ஓடிப்போய் விட்டதே அதான ஆச்சரியம!" "எல்லாம் எனக்குத் தெரியும் கற்பூரம்! எனக்கும் பொன் மணிக்கும் முடிச்சுப் போட நீ ஆடிய நாடகம்தான் அதுன்னு எனக்கு நல்லாத் தெரியும் ! 66 “ஆ பயப்படாதே! அண்ணன் மேல் உள்ள அன்பிலேதான் அப்படி செஞ்சியே தவிர, வேற தவறாக நீ செய்யவிலை! ஆனாலும் உன்னைப்போல இருக்கிற பெண்களுக்கு இந்த மாதிரி புத்தியெல்லாம் வரக்கூடாது!" 88 - "நீ எதுவேண்டுமானாலும் என்னைத் திட்டு - கவலையில்லை, அந்த அழகான பச்சைக் கிளி, பொன்மணி, எங்க அண்ண னுக்குக் கிடைச்சா அதுவே போதும்!" 66 நானும் பொன்மணியும் ஒப்பந்தம் செய்துகொண்டோமே; உனக்குத் தெரியுமா? அடேடே ஒப்பந்தங்கூட ரகசியமாக ஆகிவிட்ட தா? அடீ கற்பூரம் ! நீ கெட்டிக்காரிடி - கெட்டிக்காரி! அண்ணா! என்ன ஒப்பந்தம் அது?" ca 'இனிமேல் எப்போதும் நான் அண்ணன்-பொன்மணி என் அன்புத் தங்கச்சி! இதுதான் ஒப்பந்தம் !" விளையாடாதே அண்ணே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/126&oldid=1703114" இலிருந்து மீள்விக்கப்பட்டது