உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மு. கருணாநிதி யார் அந்த மைனா ? அவளுக்கும் இந்த மரத்திற்கும் என்ன தொடர்பு? ஒருவேளை அவள்...?" என்று கேள்வியைச் சற்று நீட்டினான் அறவாழி. 66 அவளா ? அவள் தான் என் வாழ்கையிலே முதலாவதாக வும் கடைசியாகவும் பிரவேசித்து என்னை இப்படி நாசமாக்கி விட்டவள்!" என்று மறுபடியும் அழுதிட ஆரம்பித்தான் சிங்காரம் 65 'அவள் உன் காதலியா?" 0 அதைப்பற்றிப்பேசி என்னை இன்னும் அழவிடாதே- நான் போகிறேன்; முடிந்தால் நான்கொஞ்சம் வெறியடங்கியிருக்கும் போது என்னை சந்திக்கவா! இப்போது என்ன பேசுகிறேன் என் று எனக்கே புரியவில்லை. முக்கியமாக என்வாய்பேசுவது என்காதிலே விழவில்லையென்றால் பாரேன்!" என்று சொல்லி விட்டு எழுந்தான் சிங்காரம் வேதனைக் களமாகிவிட்ட உள்ளம், அவனை நிலை தடுமாறச் செய்கிறது எனப்புரிந்துகொண்ட அறவாழி, அவனைப் போக விடாமல் தடுத்துப் பக்கத்திலேயே உட்காரவைத்துக் கொண் டான். மைனாவைப்பற்றி நான் ஏதும் கேட்கவில்லை ! அதைக் கேட்டால் தானே உனக்கு விசாரம்பிடிக்கிறது, அதிமாக! உன் தங்கையைக் கண்ணன் திருமணம்செய்து கொள்வதில் உனக் கென்ன தடை? அதைச்செல்!" எனக்கேள்வி போட்டான். 61 அவன் எப்படிப்பட்டவன் என்பதை நீயே நேரில்கண்டாய் எந்த அண்ணனாவது இதுபோன்ற ஒரு ஈனப்பிறவிக்கு கடைந் தெடுத்த அயோகியனுக்குத் தன் தங்கையைக் கொடுத்து அவளைப் பாழாக்குவானா?"- சிங்காரம் பதில் இது! "சரி-உன்னையும் மீறி அவள், அவனையே திருமணம்செய்து கொண்டால் ?” "தங்கையின் மனங்கோணாமல் நடக்கவேண்டும் என்ற தகப்பனாரின் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன் - ஆனால் இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/142&oldid=1703130" இலிருந்து மீள்விக்கப்பட்டது