உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 141 மூலம் அவருக்களித்த இன்னொரு உறுதியைக் காற்றிலே பறக்க விட்டுவிடுவேன் அப்படி பறக்கவிட்ட பிறகு எனக்கேன் வாழ்க்கை? நானும் என் மைனாவுடன் போய்விடுவேன்!" அப்படியென்ன தந்தையிடம் உறுதி அளித்திருக்கிறாய்?” கரகமாடிக் கண்ணனின் அப்பன்-அது தவறினால் அவன் மகனாகிய இந்தக் கண்ணன் - இருவரில் ஒருவரைக் கரும்புள்ளி செம புள்ளி குத்திக் கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடவேண்டும் என்பதே அந்த உறுதி! அவன் அப்பன் தப்பித்துக்கொண்டான் -மகனுக்காவது அந்த விழாவை நடத்தலாம் என்று வெகு நாளாக நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் குள்ளேதான் இப்படி வந்துவிட்டது!” அதற் "ஏ அப்பா - எவ்வளவு பயரங்கரமான சபதம் ! ஏன் இப்படி யொரு உறுதியெடுக்கவேண்டும்? அப்படி என்ன அவர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் ?”

  • அய்யோ - அந்தக் குற்றத்தைச் சொல்வதற்கே நாக்கு

கூசுகிறது. தயவுசெய்து என்னைக்கேட்டுத் தொந்திரவு பண்ணவேண்டாம்!" அறவாழிக்கு ஆவல் அடங்கவில்லை. எடுத்துக்கொண்டிருக் கிறசபதமோ பயங்கரமாயிருக்கிறது; பழிவாங்கவேண்டுமென்ற உணர்ச்சியோ கொந்தளித்துக் கிளம்புகிறது; அதற்கான காரணத்தைமட்டும் புரிந்துகொள்ளாமல் போய்விடமுடியுமா என்ன? தானோ அதிகமாக அறிமுகமாகாதவன். மேலும் வற்புறுத்திக்கேட்கவும் சிறிது பயமாக இருந்தது இருந்தாலும் உடனே தளர்ந்துவிடாமல், "நான் உனக்குப் பழக்கப்பட்டவன் அல்ல; என்றாலும் ஏதோ ஒரு உணர்வு, உன்பால் இழுத்து விட்டது. உன்கதையைக் கேட்கவேண்டும் போலிருக்கிறது. உன்கண்ணீருக்குக் காரணம் அறியவேண்டும்போல் உள்ளம் துடிக்கிறது. உன்சபதத்தை நினைத்தாலே நடுக்கம் பிறக்கிறது? ஆனால் சபதம்எழுந்த விதத்தைமட்டும்கூற மறுக்கிறாய்! இது நியாயமல்ல என்னை நீ நம்பலாம் தயவுசெய்து சொல்லு- எவ்வளவு பெரிய ரகசியமாக இருந்தாலும் அதைக் காப்பாற்று - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/143&oldid=1703131" இலிருந்து மீள்விக்கப்பட்டது