உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 147 என்னா தபீ சுகமா? வீட்டிலே அப்பா,அம்மா,எல்லோ ரும் சுகமா? எனக் கேட்டான. 66 அக்காள் சுகமா?" என்று கேட்கவில்லை அப்பா அம்மா வைப்பற்றிக் கேட்டதெல்லாம் வெறும் உபசாரத்திற்கு' 'அககாள் சுகமா?' என்றுதான் அவன் கேட்டிருக்க வேண்டும் அதைக் கேட்க அவனுக்கே ஒரு வெட்கம் ! சுருளிமலையோ சாதாரணமாகப் பதில் சொன்னான்; அக்காள் உட்பட அனைவரும் சுகம்!" என் று ! MACHZO சுருளிமலை இந்தப் பதிலை வேண்டுமென்றோ கிண்ட லாகவோ சொல்லவிலலை. அக்காள் இருப்பதை அறவாழி மறந்து, விட்டானே யென்று கருதி அவன் அப்படி விடையளித்தான். ஆனால் அறவாளிக்கு அது சுருககென்று தைத்தது. குற்றமுள்ள நெஞ்சல்லவா? ஆமாம் எப்ப பார்த்தாலும் கோயில் காளை - GNG புல்லாங் குழல் இப்படி- ஊர்சுற்றுகிறாயே; படிப்பதில் உனக்கு ஆசையே கிடையாதா ?"-அறவாழியின் கேளவிக்கு சுருளிமலை பதில் கூறவில்லை. அறவாழி தொடர்ந்தான். G . நான் சொல்வதைக் கேள். ஒரு நாளைக்குக் கொஞ்ச நேர மாவது படி!" பதில் இல்லை. சிரித்தான் சுருளிமலை. நாளையிலே யிருந்து படிக்கிறாயா?" இதற்கும் மௌனம்தான்! படிப்பு என்றால் உனக்குப் பிடிக்காதா?" சுருளிமலை அறவாழியையே உற்றுப் பார்த்தான். இளமையில் கல் என்பது முதுமொழி தம்பி! இந்த வயதிலே படித்தால்தான் நல்லது. ஐந்தில் வளையாது பிறகு ஐம்பதில் வளையாது! எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும். படிப்பு மிகவும் அவசியம்! மிகவும் அவசியம் ! சொல்வது புரிகிறதா தம்பி!" 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/149&oldid=1703137" இலிருந்து மீள்விக்கப்பட்டது