உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மு. கருணாநிதி சுருளிமலை இன்னும் உன்னிப்பாக அறவாழியைக் கவனித் தான் பதில கூறவில்லை. என்ன விழிக்கிறாய்? நான் சொல்வது ஏதோ பைத்தியக் காரன் உளறல்போல இருக்கிறதா? அப்படியெல்லாம் நினைக் காதே படித்தால்தான் உலக விஷயம் தெரியும். அறிவு பிரகாச மடையும் அலட்சியமாய் நினைக்காதே தம்பி !" இப்போது சுருளிமலை. சுருளிமலை. கலகலவென நகைத்தான். அறவாழிக்கு ஒன்றும் புரியவில்லை திகைத்தான். பின் சுருளிமலை தன் மடியிலிருந்து ஒரு காகிதச் சுருளை யெடுத்து அறவாழியிடம் கொடுத்தான். அறவாழி, அதை ஆவலாக வாங்கிப் பிரித்துப் வார்த்தான். அவனை உடனடியாக அந்த ஊரைவிட்டு வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்ற வேண்டுமென்று ஊர்மக்கள் ஊர் கையெழுத்திட்ட மகஜர் அது ! மகஜரைப் பார்த்ததும் அறவாழி அவ்வளவு திடுக்கிடவில்லை. அவன் எதிர்பார்த்ததுதான். அதில் எழுதப்பட்டிருந்த குற்றச் சாட்டுக்களும் அவனைக் கலக்கிடவில்லை. ஐந்தாறு தாள்கள் இணைக்கப்பட்டிருந்த அந்த மகஜரில் முதல் தாளில் அறவாழியை மாற்றிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் எழுதப்பட்டி ருந்தன. மரியாதை யில்லாதவன்; ஊராரிடம் ஆணவமாக நடந்து கொள்கிறான்; எல்லாம் தெரிந்தவனைப்போல் மற்றவர் களுக்குப் புத்தி சொல்கிறான்; ஒழுங்காகப் பாடம் நடத்துவ தில்லை; பிள்ளைகளை உருப்பட வைக்கமாட்டான் ; வீண் கதை பேசுவதே பள்ளிக்கூடத்தில் வேலை இப்படிப்பட்ட குற்றச் சாட்டுகளை முதல் பக்கம் முழுதும் நிரப்பிவிட்டு, அடுத்த தாள் களில் ஊர்மக்கள் தங்கள் கையெழுத்துக்களை நிரப்பி விருந்தார்கள். - பஞ்சாயத்தார் பரமசிவத்தின் கையெழுத்தே முதல் கையெ ழூத்து! யார் யார் கையொப்பமிட்டிருக்கிறார்கள் என்று வரிசை யாகப் பார்த்து வந்த அறவாழி, இதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோல் திடுக்கிட்டான்-வேதனைப்பட்டான். காரணம்; கையெழுத்து வரிசையின் கடைசியில் பொன் மணிபின் கையெழுத்தும் இருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/150&oldid=1703138" இலிருந்து மீள்விக்கப்பட்டது