உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மு கருணாநிதி இளம் போதையில் அவன் இருக்கிறான் என்பதையும் அவ னுக்கு உணர்த்தியது. " சரி, சரி...அப்புறம்?" என்று எழுந்தான் சுருளிமலை. 66 எனக்கு அவசரமா ஒரு தீச்சட்டி வேணும்-அம்மா கிட்ட போயி, நான் சொன்னதாச் சொல்லி ஒரு தீச்சட்டி சீக்கிரம் தயார் பண்ணி இரண்டு சொல்லு! நாளில் கொடுக்கச் நீயே அம்மாகிட்ட போயி கேளு-போ! “ ஏன் ? நீ எங்க பெரிய கலெக்டர் வேலைக்குப் போறியோ? ஆமாம்; கெலெக்டர் வேலையைவிடப் பெரிய வேலை ஒன்று இருக்கு. அதை கவனிக்கப் போகிறேன் ! " மலை அப்படிப்பட்ட வேலை என்னடா தம்பீ ?' கொஞ்சம் அண்ணாந்து பார் மரக்கிளையை!" என்று சுருளி அமைதியாக மேலே சுட்டிக் காட்டினான். க சிங்காரம் அண்ணாந்து பார்த்தான். திடுக்கிட்டான். 'ஆ' என்று அவனை யறியாமல் அலறி விட்டான். மரக் கிளையில் ஒரு இளம் பெண் தூக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருந்தாள். “என்னடா பாவிப் பயலே இது? இவ்வளவு நாழி எனக் கிட்டே சொல்லவே யில்லையே " நீ நான், ஒரு மடையன் இவ்வளவு நாழி இதை கவனிக்காம உனக்கிட்டே வம்பு பேசிக் கிட்டு இருக்கேன். ஏன்டா பிள்ளை யாண்டான்! தூக்கு மாட்டிக் கிட்டு தொங்குற ஒருத்தி; அதைப் பத்திக் கவலைப்படாம புல்லாங்குழல் ஊதிக்கிட்டு இருக்கியே என்னடா அட்டா உயிர் இருக்குமோ என்னமோ தெரியலியே!' எனப் பரபரப் புடன் மரத்தில் ஏறத் தொடங்கினான் சிங்காரம். சரியண்ணே! நீ இதைக் கவனி; நான் போயி பஞ்சாயத் தாரை அழைச்சுட்டு வர்ரேன் " என்று சுருளிமலை வேப்பமரத் தடியை விட்டகன்று பஞ்சாயத்தார் வீடு நோக்கிப் புறப்பட்டான். பஞ்சாயத்தார் பரமசிவம், வீட்டுத் திண்ணைப் புறத்தில் தன் அருமருந்தன்ன மைந்தனின் சேட்டைகளைத் தாங்கிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/20&oldid=1694884" இலிருந்து மீள்விக்கப்பட்டது