உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 19 66 அட ஈஸ்வரா " என்று தலையில் கை வைத்தவாறு உட்கார்ந் திருந்தார். 66 அப்போ! அப்போ! உலகத்தை யாரப்பா தூக்கிக்கொண் டிருக்கிறாங்க? ” 60 ஆண்டவன் தூக்கிக்கிட்டு இருக்காருடா...சும்மாகிட ! " அவருக்குக் கழுத்தை வலிக்காதா அப்போ ? ” - வலிக்கும்போது, தோள்மாத்திக்குவாரு - சும்மா இரு !" "ஒரு நாளைக்கு ஆண்டவன் உலகத்தைப் பொத்துன்னு கீழே போட்டா என்னாப்பா ஆகும் ? " "அப்படிப் போட்டால்தான் தேவலையே- என் சங்கடம் தீரும் - நிம்மதியாப் போகும்; உன் தொல்லையில்லாம !" " எப்போ! ஆண்டவனுக்கிட்ட சொல்லி,உலகத்தைத்தூக்கி என் தலையிலே வைக்க சொல்லப்பா ! ” "அதான் உன் தலையிலே உலகத்தை வச்சிருக்காரே ! பிறகென்ன... மூளையையா வச்சுருக்காரு?... உலகத்தில் இருக் கிற மண்ணு பூரா உன் தலையிலே தானே ! - . உ -என்று தன் தலையிலே அடித்துக்கொண்டார் பஞ்சாயத் தார். நாள் முழுவதும் வீட்டிலேயிருக்கிற நேரமெல்லாம் பஞ் சாயத்தாருக்குத் தலைவேதனை தான் அன்று 'அதிகாலையிலேயே வேதனை ஆரம்பமாகி விட்டதே கடவுளே' யென்று பெருமூச்சுவிடும் போதுதான் சுருளிமலை அங்கு வந்து வேப்பமரத்தில் ஒரு பெண் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குகிற செய்தியைச் சொன்னான். பஞ்சாயத்தார் பரபரப்புடன் வேப்பமரத்தடிக்குப் புறப்பட்டார். செய்தி பர விடவே அவரோடு ஊராரும் பின் தொடர்ந்தனர். அதற்குள், மரத்திலேறிய சிங்காரம் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் முகம் மேலாக்குத் துணி யால் மூடப்பட்டிருப்பதைக் கண்டான். அவசர அவசரமாக கயிற்றுச் சுருக்கை விடுவித்து, அவளைக் கீழே இறக்கினான். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/21&oldid=1694904" இலிருந்து மீள்விக்கப்பட்டது