உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 3 27 மைனாவின் கூச்சலைக் கேட்டு சிங்காரம் சிறிது திடுக் கிட்டானாயினும் வெளியே ஓடி விட முயலாமல் புதிய தைரி யத்தை வரவழைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான். 66 பார்த்தாள். தெரிய மைனாவும் அவனை உற்றுப் வில்லையா யாரென்று ? விளக்கை எடுத்து முகத்தைப் பாரேன்!” என்று சாவதானமாகச் சொன்னான் சிங்காரம். வீட்டுக்குள்ளே நுழைந்த ஒரு ஆடவன், அகப்பட்டுக் கொண்ட பிறகும், நிதா னமாகவும், துணிவாகவும் பேசுவது அவளுக்குப் புதிராகத் தோன்றியது. மாடத்தில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்து அவன் முகத்துக்கு நேரே பிடித்தாள். அவள் கரம் அவளையறியாமல் நடுங்க ஆரம்பித்தது. திடீரென அவள் கண்கள் தரையை நோக்கிக் கவிழ்ந்தன. இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இரவு நேரத்தில் யாரோ ஒருவன்- கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ திடீரென்று வீட்டுக்குள் புகுந்து விட்டான் என்ற அதிர்ச்சியிலேகூட அவளுக்கு ஏற்படாத நடுக்கமும், தடுமாற்றமும்-அவன் யாரு மில்லை; சிங்காரந்தான் எனத்தெரிந்த பிறகு அவளை ஆட்டிப் படைக்கத் துவங்கின. அவளாலேயே கட்டுப் படுத்த முடியாமல் நாக்கு குழறிற்று. மார்கழி மாதத்தில் வைகறைக் குளிரில் குளத்தோரத்தில் அமர்ந்திருப்பவருக்கு ஏற்படும் உதறல் அவளது ஒவ்வொரு அங்கத்திலும் தாண்டவமாடியது. விளக் கொளியும் அவளோடு சேர்ந்து நடுங்கியது. அவள் நிலையை சிங்காரம் புரிந்து கொண்டான். தன்னுடைய திடும் பிரவேசத் தால் ஆபத்து ஏதும் நிகழ்ந்து விடாது என்ற நம்பிக்கை பிறந்து விட்டது அவனுக்கு. மெதுவாக, 66 மைனா!" என்றான். "என் பெயர் எப்படித் தெரியும் உங்களுக்கு ?"-அவள் இது போலக் கேட்கவில்லை. வியப்பை விழிகளில் நிறைத்துக் கொண்டு அவனை ஒருமுறை பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/29&oldid=1694912" இலிருந்து மீள்விக்கப்பட்டது