உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D 28 மு. கருணாநிதி "என்மேல் கோபமா ?" என்று அவளிடம் நெருங்கினான். அவள் அவனை விட்டு சுவற்றுப் பக்கம் போனாள். மனித ஜாதியின் மர்மங்களைப் புரிந்து கொள்ளாத பூனைக் குட்டி, ஒளியுமிழும் கண்களால் அவர்களை மாறி மாறிப் பார்த்துக் காண் டு உட்கார்ந்திருந்தது. சிங்காரம் இன்னும் நெருங் கினான். மைனாவின் கண்களிலேயிருந்து நீர் பெருகிற்று. 66 ஏன் அழுகிறாய்?" என்ற வாறு சிங்காரம் அவள் கரத்தைப் பிடித்தான். அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். அந்த அழுகை, சிங்காரம் இன்னும் அதிகமாக அவளைத் தொட்டு ஆறுதல் கூறுவதற்கான வாய்ப்பை அளித்தது. அழாதே! அழாதே ! ... இப்படி உக்காரு!" சிங்காரம் அவன் தோளில் அணைத்தவாறு அவளைக் கீழே காரவைத்தான். அவளும் தலைகுனிந்துவாறு உட்கார்ந்து கொண்டாள். நெளி நெளியாகச் சுருண்டிருக்கும் அவளது கருங் கூந்தலைக் கையால் கோதிய சிங்காரத்திற்கு அந்த விரல் களின் வழியாக மின்சாரம் பாய்ந்து தன்னைப் பிரக்ஞை இழக்கப் செய்வது போன்ற உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பியது. ஆனால் அந்த நிலையில் அவன் மிருகமாக மாறிவிட விரும்பவில்லை. சிங்காரத்தின் தோற்றம் - பேச்சு பாவனை வாயிலிருந்து வீசும் கள் வாடை இவைகளைக் கவனிப்பவர்க களுக்கு சிங்காரம் ஓர் அழகான பெண்ணின் பக்கத்தில் மனிதப் பண்போடு அமர்ந்திருந்தான் என்பது நம்ப முடியாத சேதி யாகத்தானிருக்கும். அழகிய உருவும் உருவும்- அந்தஸ்து ஆஸ்தி மிகுந்த - நடை, உடை, - நிலையும் - பார்ப்பதற்குப் பசுவின் தோற்றமும் உடைய எத்தனையோ பேர் பகல் நேரத்துப் பத்தினிகளாக தான் இருக்கிறார்கள் என்பதை ஆடவர் பெண்டிர் இரு சாராரிலும் சகஜமாகக் காண முடிகிறது. இதை யாரும மறுக்க முடியாதது போலவே பார்வைக்குப் புலிபோல் காட்சியளிக்கும் சிங்காரமும் இயற்கையாகவே இழிகுணமற்றவன் என்பதையும் யாரும் மறுத்துவிட இயலாது. அவள் அழுவதை நிறுத்தவில்லை. அவளை எப்படியாவது பேச வைக்க வேண்டுமென்று சிங்காரம் தீர்மானித்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/30&oldid=1694913" இலிருந்து மீள்விக்கப்பட்டது