உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 35 என்னால் படுத்திருக்க முடியவில்லை. அப்போதுதான் விழிப்பதுபோல எழுந்தேன். மைனா என்று அன்போடு கூப் பிட்டவாறு அருகே வந்தார் அந்த அர்ச்சுனர் ! என் கன்னத்தில் காலை முததம் ஒன்றும் கொடுத்தார் அதைப் பெற்றுக்கொண்டு, அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியே வந்த என் காதில்..... அய்யய்யோ ! " என்ற ஒப்பாரி சப்தம் கேட்டது! $4 "என்னவென்று கேட்க ஓடினேன். என் அப்பா. விடியற் காலையில கடைசித் தடவையாகக் டசித் தடவையாகக் கண்களை மூடிவிட்ட காட்சி யைத் தாழ்வாரத்தில் கண்டேன்......" 66 4 கல்யாணத்துக்கு மறு நாளே வீட்டில் ஏற்பட்ட அசம் பாவிதமான சாவுச் செய்தியால் உறவினர்கள் எல்லாம் அங்க லாய்த்துக் கொண்டனர். மாப்பிள்ளை குடும்பத்துக்கு ஆகாத ஒன்று நடந்து விட்டதாக ஒருவருக்கொருவர் முணு முணுத்துக் கொண்டனர். கல்யாணத்துக்கு வந்திருந்த என் சொந்தக் காரர்கள் சிலரைத் தவிர மற்றயாவருமே என்னைச் சற்று வெறுப்போடுதான் பார்த்தார்கள். அப்பாவின் பிணத்தின் மீது விழுந்து அலறினேன். என் சோகம் இரட்டிப்புப் பங் காக மாறுவதற்குக் காரணம் இருந்ததைத்தான் நீங்கள் அறி வீர்களே, இப்போது! நல்ல வேளையாக நான் திககுத் தெரி யாத காட்டில் அகப்பட்டுக்கொண்டு திகைப்பதை என் தந்தை அறிந்து வேதனைப்படாமலேயே போய்விட்டார் என்ற திருப்தி ஏற்பட்டது எனக்கு. சாயங்காலத்திற்குள் அப்பாவின் தகனக் கிரியை எல்லாம் முடிந்துவிட்டது. 68 இருள் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. என் வாழ்க் கையில் அதற்கு முன்பே இருள் மூடிக்கொண்டது. நானாகத் தேடிக்கொண்ட வேதனையை நினைத்து நினைத்து அழுதேன். என் கணவர் உட்பட அனைவருமே அப்பாவை நினைத்துத்தான் அழுது புலம்புகிறேன் என்று எண்ணிக்கொண்டு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். வீட்டில் துக்கமெல்லாம் கொண் டாடி பத்து நாட்கள் கழித்த பிறகு மறுபடியும் என் கணவரைத் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/37&oldid=1694921" இலிருந்து மீள்விக்கப்பட்டது