உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - மு. கருணாநிதி தனியறையில் சந்திக்க வேண்டிய பயங்கரமான நேரம் நிச் சயம் வருமே - அய்யோ ; அதை நினைத்தாலே எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. பத்து நாள் கழித்துத்தானே அந்த நெருக்கடி வரப்போகிறது ; அதுவரையில் அவர் வீட் டிலேயே இருந்து சமாளித்துப் பார்ப்போமே-என்று முதலில் நினைத்தேன். ஆனால் வேறொரு பயம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பத்து நாளில் அவர் என்னோடு பழகு வதில் என்னிடம் மிகுந்த அன்பையும் பிரியத்தையும் காட்டி, ஒரு கணவனிடத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிற பாசம் இல்லாவிட்டாலும், ஒரு வயதான பெரியவரிடத்தில், தகப்பனி டத்தில், பாட்டனிடத்தில் ஏற்படுகிற பற்றோ பாசமோ எனக்கு அவர்மீது ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று சந்தே கப்பட்டேன். மிகவும் பயந்தேன். நான் நினைத்தது போலவே அவர் என்னிடம் தந்தை இறந்ததுபற்றிக் கவலைப்படாதேயென்று ஆறுதல் சொல்ல முன்வந்தார். நாடகத்திற்காக மனப்பாடம் செய்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை; ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ ?' என் று பாட்டெல்லாம் சொல்லிக்காட்டி எனக்குத்தேறுதல் கூறினார். நான் முடிவு செய்துவிட்டேன் ; இனி ஒருக்கணமும் அவரோடு வாழ்வதில்லையென்று! இந்த முடிவு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு தான் தோன்றியது என்பதையும் நீங்கள் உணரவேண்டும். 64 அவர் உன் கணவராயிற்றே-அவருக்குத் துரோகம் செய்யலாமா?" என உபதேசம் செய்தது மனம். பிறகு அதே மனம், செய்தால் என்ன ? அவர்மட்டும் வெளி வேஷத்தால் உன்னை மயக்கித் துரோகம் செய்யவில்லையா ? என்று சமா தானமும் கூறியது. அடிமுட்டாளே! அவரா உன்னிடம் வந்து என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கேட்டார். நீதானே தேடிப் போனாய்! இப்போது அவரைக் குற்றம் சுமத்துவது முறையா?' என்ற ஒரு கேள்வி என் நெஞ்சில் தோன்றும். உடனே ; அதற்குப் பதிலும் உதயமாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/38&oldid=1694922" இலிருந்து மீள்விக்கப்பட்டது