உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 41 யிருந்தன. அதை பீதாம்பரம் கவனிக்கத் தவறவில்லை. அவள் சொல்லாமலே பீதாம்பரம் வீட்டுக்குள் உட்கார்ந்தார். அவரைப் பார்த்த பூனை கத்திக்கொண்டு அவரிடம் ஓடிவந்தது. அட, நீயும் இங்கதான் இருக்கியா ?...உனக்குக் கூடவா என்னைப் பிடிக்கவில்லை? என் வீட்டு சோற்றை எவ்வளவு நாள் தின்றாய்; திடீரென்று புது சிநேகிதம் கிடைத்ததும் வந்து விட்டாயா?” என்று பூனையை இழுத்துத் தடவிக்கொடுத்தார் பீதாம்பரம். உட்காரேன் மைனா -ஏன் நிற்கிறாய் ?" என்றுஅன்போடு அவளை உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. "காலங்காத்தாலே ரொம்ப தூரம் நடந்தது பசி தாங்க முடியவில்லை...ஏதாவது இருக்கிறதா? போடுகிறாயா?" என்று மிகச் சாதாரணமாய் கேட்டார் அவர். மைனாவால், பீதாம்பரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சரி : உனக்கேன் சிரமம்-இருந்தால் நானே போட்டுச் சாப்பிடுகிறேன்!" எனக் கூறியவாறு பீதாம்பரம் அடுக்களையில் உள்ள பானையிலேயிருந்து பழைய சோற்றை எடுத்துத் தட்டிலே போட்டுக்கொண்டு மைனாவுக்கு எதிரே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அவரோடு, அதே தட்டில் பூனையும் சாப் பிடத் தொடங்கியது. மைனாவுக்கு நிற்க முடியவில்லை. உடலெங்கும் நடுங்கியது. ஆயினும் வலுவில் மன உறுதியை வரவழைத்துக் கொண்டு சமாளித்துக்கொள்ள முயன்றாள். "உப்பு இருக்கிறதா ?" என்றார், பீதாம்பரம்! உப்புக் கிண்ணத்தை மைனாவே எடுத்து அவருக்கு அருகில் வைத்தாள்."கொஞ்சம் போடு உன் கையாலேயே ; அளவாக!" என்று பீதாம்பரம் கோரிக்கைவிடவே, அவளும் பழைய சோற்றில் உப்பைப்போடத் தொடங்கி, கிண்ணத்தையே கைதவறிக் கவிழ்த்து விட்டாள். பீதாம்பரம் அதுகண்டு, கல கல' வென நகைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/43&oldid=1694927" இலிருந்து மீள்விக்கப்பட்டது