உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 67 இரவு அவன் நன்றாகக் குடித்திருந்தபோது மைனாவை நினைத்து மயான காண்ட மெட்டிலே காதல் கீதமே பாட ஆரம் பித்துவிட்டான். அவனுடைய கூட்டாளிகள் தடுத்திரா விட் டால் தள்ளாடித் தள்ளாடி நடந்தாவது தப்பித்தவறி வேப்ப மரத்தடிப்பக்கம் போயிருப்பான். தற்கொலைக்குத் தயாராகி விட்ட மைனாவைப் பார்த்திருப் பான். மைனா, அவன்மீது கொண்ட சந்தேகம் நிவர்த்தியாகி யிருக்கும். கோவில் நிர்வாகியின் கோணல் சேட்டையை அவள் கூறியிருப்பாள். சிங்காரத்தின் ஆத்திரம் நிர்வாகியின் மீது திரும்பி அது பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இப்படி எதுவுமே நடக்காமல் அவனை முடக்கிவிட்டது மயக்க உணர்ச்சி ! வேம்பில் கரும்பு தொங்குவது போல் அவள் தொங்கி விட்டாள். சிங்கா நல்லூரில் பிறந்தாள். சிந்தை மணக்கும் சீரானவாழ்வு எய்தியதாகப் பெருமகிழ்வுகொண்டு வாழ்க்கையின் முதற்படியில் கால் வைத்தாள். பாசி பிடித்த அப்படியிலிருந்து வழுக்கித் தலைகுப்புறவிழுந்து மூர்ச்சையானாள். பின் கண்திறந்து பார்க்கும்போது வரண்டு போன நாளில் ஒரு துளி தேன் விழுந்ததுபோல சிங்காரம் வந்தான். தேன் துளிமீது தேள் விஷம் கொட் டியது போல் கோயில் நிர்வாகி குறுக்கிட்டான். மைனா அடியோடு பாழ் படுத்தப்பட்டு விட்டாள். அவளுக்கு இனிமேல் உலகத்திலே ஆதரவு அந்த கனமான வேப்பமரக் கிளைதான். அவளுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு, அந்த இரண்டு முழக் கயிறோடு முடிந்து விட்டது. அந்த இருட்டில் அவள் எவ்வளவு துணிச்ச லாக வேப்பமரத்தின் மீது ஏறினாள்! அவள் எதற்காகப் பயப்பட வேண்டும்? தவறிக் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சவேண்டுமா என்ன? அப்படி விழுந்தாலும் அவள் விரும்பியபடி உயிர் போய்விடப் போகிறது. ஆகவே மளமளவென்று மரக் கிளையில் தொத்தினாள். கயிற்றைக் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு மரக்கிளையில் இணைத்தாள் அப்பா !" என்று விம்மும் குரலில் ஒருமுறை கூவினாள். அந்த ஒரு வார்த்தையில் தான் எவ்வளவு சதை அடங்கியிருக்கிறது. மகளின் சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அவள் தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டார்! மகளின் மனதுக்குப் பிடித்த மணவாளனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/59&oldid=1694943" இலிருந்து மீள்விக்கப்பட்டது