உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மு. கருணா நிதி தேர்ந்தெடுத்தோம் என்பதிலே அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி ! நல்லவேளை ; அவர் இந்தக் கொடுமையை யெல்லாம் பார்க் காமலே கண்களை மூடிவிட்டார் என்ற ஆறுதல் கலந்த பெரு மூச்சு வெளிப்பட்டது. அதுதான் அழகி மைனாவின் கடைசி மூச்சு போலும்! அடுத்த கணம் கிளையிலிருந்து குதித்து கயிற்றிலே ஊச லாடினாள். சில விநாடிகள் உயிர்த் துடிப்புக்குப் பிறகு மைனா அமைதி பெற்றாள். இப்போது அவள் நெஞ்சிலே துயரமில்லை. பீதாம்பர பாகவதரின் உருவம் அவள் கண் எதிரே வந்து மிரட்டுவது இனி முடியாது. கோயில் நிர்வாகியின் பயங்கர உருவத்தை நினைத்து நினைத்துப் பயப்படும் அவள் மனக்கண் அறவே மங்கி விட்டது! தீச்சட்டி சிங்காரத்தைப் பற்றிய நினைவு அலைகள் எழுவ தற்கு இனி இடமே இல்லை. அவள தன்னை விடுவித்துக் கொண்டாள். போய்விட்டாள். அவளை விட்டுப் பிரிந்து வந்தது முதல் அவளது பெயரையே மந்திரம்போல் உச்சரித்துக் கொண் டிருந்த அவனுக்கு தலையிலே இடி விழுந்தது போலாயிற்று அந்தக் காட்சி. குடித்தனம் நடத்துவதற்கு அவன் போட்ட திட்டங்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறிவிட்டன. ரெத்தைத் துடிக்க வைத்துவிட்டுப் நினைவிழந்து விழுந்த அவனை அருகாமையில் யார் வீட்டுக்காவது உடனே தூக்கிக் கொண்டு போகும்படி பஞ்சா யத்தார் பரமசிவம் அவசரப்பட்டார் மருத்துவரை அழைக்க ஒரு ஆள் ஓடினான். அதற்குள் சிங்காரத்தை பூஞ்சோலையின் வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள். பூஞ்சோலையம்மாள் பதறிப் போய் அவன் மயக்கம் தீர்வதற் காக ஏதேதோ சிகிச்சைகள் செய்தாள் ஒன்றும் பயன்பட வில்லை. அண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்தைக் கேள்விப்பட்ட கற்பூரம் பூஞ்சோலை வீட்டுக்கு ஓடினாள் அங்கே சிங்காரம் அசை வற்று வீழ்ந்து கிடக்கும் காட்சியைப் பார்த்ததுதான் தாமதம்; உணர்ச்சி வசப்பட்டு விட்டாள். ஆவேசம் வந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/60&oldid=1694944" இலிருந்து மீள்விக்கப்பட்டது