உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 62 மு. கருணாநிதி சிங்காரம் அமைதி பெற்றதும் ஒவ்வொருவராகப் புறப் பட்டனர். நாளைக்கு நல்ல மந்திரவாதியாக அழைத்து வந்து சிங்காரத்தின் பேயை ஓட்டி விடலாம் என்று சிலர் உறுதி யளித்துச் சென்றனர். கரகமாடிக் கண்ணன் பேய் ஓட்டுவதில் வல்லவன்; அவன் பார்த்தால் பேய் பறந்துவிடும் என்று ஒரு அபிப்பிராயம் கூறப்பட்டது அந்தச் சேதி காதிலே விழுந்ததும் சிங்காரம், 'ஹா! என்ன சொன்னாய்?" என்று அலறினான், ஆத்திரமாக ! கண்ண னுக்கும் தன் வீட்டுக்கும் உள்ள பரம்பரைப் பகையை நினைத்து, சிங்காரம் அப்படிக் கத்தினான். ஆனால் மற்றவர்கள், அது பேயின் குணம்" என்று தீர்மானம் செய்துகொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது. கற்பூரம் மாத்திரம் அண்ணனுக்குப் பக்கத்தில் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பூஞ்சோலையும், பொன்மணியும் திகிலடைந்தவர்களாய்க் காணப் பட்டார்கள். பொன்னையாவுக்கு எல்லாம் புதுமையாய்த் தோன்றின போலும்; "ம்.. ஈஸ்வரா!.. "ம். ஈஸ்வரா! - ஈஸ்வரா !" என்று முனகிக்கொண்டார். ... வீட்டுக்கு வெளியே குழலோசை கேட்டது. சுருளிமலைதான் வருகிறான் என்று பொன்மணி ஆவலோடு எதிர்பார்த்தாள். சுருளிமலை, எதைப்பற்றியும் கவலைப்படாத நிலையில் அநாயாச மாகக் குழலை ஊதியபடி திண்ணையில் உட்கார்ந்தான் பொன்மணி ஓடிவந்து, "தம்பீ! என்ன ஆச்சு என்று கேட்டாள். “என்ன ஆச்சு? செத்தவள் பிழைத்துக் கொண்டாள்!” என்றான் சுருளிமலை. ஆ! பிழைத்துக் கொண்டாளா?'-பொன்மணி ஆச்சரி யத்தால் வாய் பிளந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/64&oldid=1694950" இலிருந்து மீள்விக்கப்பட்டது