உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சுருளிமலை 8 63 சுருளிமலை, வழக்கமான அலட்சியத்தோடு பதில் சொன்னான் ; ஆமாம்; செத்தவளோட வாய் பேசினாலும் பரவாயில்லியே ; அவளுடைய முந்தாணியில்ல பேசுச்சாம் ! பொன்மணி, இன்னும் வியப்போடு என்னடா தம்பீ என்னென்னமோ சொல்றே-புரியும்படியா சொல்லு!' என்று ஆவலைக் கொட்டினாள். " செத்தவங்க, தான் செத்ததும் இல்லாம ஊர்ல இருக்கிற வங்களையும் ஆபத்திலே மாட்டி விட்டுப் போய்ட்டாங்களே!" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் சுருளிமலை. 66 நீ விபரமாச் சொல்லப் போறியா இல்லியா? என்று சற்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் சகோ தரி. 61 'தூக்கு மாட்டிக்கிட்ட பிரேதத்தை பஞ்சாயத்தார் மூலமா போலீஸ்காரங்க வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க! அங்க போயி பிரேதத்தை விசாரணை பண்ணினாங்களாம். அதுக்குப் பேரு பிரேத விசாரணையாம். தற்கொலைதான்னு முடிவு செஞ்சாங்களாம். அந்த சமயம், திடீர்னு பிரேதத்தோட முந்தானையிலே ஒரு முடிச்சு தெரிஞ்சுதாம். அதை அவிழ்த்துப் பார்த்தா அதிலே ஒரு கடிதம் இருந்துதாம். அதைப் படிச்சாங்களாம்." 66 அதிலே, "நான் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் ; அந்தப் பாவி தீச்சட்டி சிங்காரந்தான்'-அப்படின்னு எழுதியிருக்குதாம்." இதை அவன் சொல்லி முடிப்பதற்குள், பொன்மணிக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்து நாக்குழறிவிட்டது "அய்யய்யோ! இது என்னடா புது வம்பு! தம்பீ, அவர் இங்க நம்பவீட்லதானே இருக்காரு...' என்று பீதியோடு கூறினாள். சுருளிமலை பரபரப்படையாமல் உள்ளே எழுந்து சென்றான். " அவனைக் கண்டதும் சிங்காரம், சுருளிமலை! மைனா எங்கே? என் மைனா எங்கே ?" என்று கத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/65&oldid=1694952" இலிருந்து மீள்விக்கப்பட்டது