பக்கம்:சுலபா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 #68)L!rr

பேரும் எங்க ஏ. சி. பென்ஸ் காரில் திருப்பதி போருேம்.

திருப்பதியிலே சகஸ்ரகலசாபிஷேகம் பண்ணிப் பெருமாளைத் தரிசனம் பண்ணிட்டுப் பகல் மூணு மணிவரை அங்கே ஒய்வு எடுக்கிருேம். அப்புறம் அங்கிருந்து மதனபள்ளி போற

ரோட்டிலே ரிஷி வேலிக்கு முன்னுடி இருக்கிற திவ்ய சேவா

சிரமம்” என்கிற ஆசிரமத்துக்குப் போகிருேம். அந்த ஆசிரமம் ஒரு காட்டாற்றில் கரையில் முந்நூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய மாந்தோப்புக்குள் குளு குளு என்று அமைந்திருக்கிறது. குளு குளு என்றிருக்கும் அதன் சூழ்நிலையே மிகவும் ரம்மியமானது. அதிலே இளம் வயதில் பலவிதமாகச் சீரழிந்து வாழ்வை இழந்து வழி தவறிய மென்களுக்கு மறுவாழ்வு அளித்துக் கல்வி தொழிற்பயிற்சி எல்லாம் தரும் நிலையங்கள் உள்ளன, இன்னொரு பகுதியில் அதை நடத்தும் திவ்யானந்தர் என்ற அழகிய துறவியின் ஆசிரமம் ஆற்றங்கரையில் ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்தத் திவ்யானந்தர் பேரழகவி. உன் கனவு களில் நிரம்பியிருக்கும் எல்லா செளந்தரியங்களும் நிறைந்த சுந்தரபுருஷன். தூய பல் வரிசை மின்ன வென்முத்துப் போல் சிரிக்கிருர். கொழுந்துவிட்டு எரியும் அக்னிபோல மேனிநிறம். பக்கத்தில் நின்ருல் வா வா என்று இழுக்கும் மல்லிகைப்பூ மணக்கிற சரீரம். ஒளி உமிழும் காந்தக் கண்கள். ஆல்ை ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னல் ஏற்பாடு செய்ய முடியவில்லை. வழிதவறுகிற இளம் பெண்களுக்குப் புத்திமதி கூறும் அவரிடம் உன்னைக் கொண்டுபோய் நெருங்க வைப்பது சுலபம். வேறு விவரங்களை ஒரு துறவியிடம் பச்சையாகப் பேரம் பேசி முடிப்பது சிரமம் என்பதால், "என் சிநேகிதி ஒருத்தி உங்கள் புத்திமதிகளைக் கேட்க விரும்புகிருள் சுவாமி! நிரம்ப வசதியுள்ள பணக்காரி- இந்த ஆசிரமத்துக்கு லட்ச லட்சமாக உதவக்கூட அவளால் முடியும். பகலில் இங்கு வரவும் உங்களிடம் பேசவும் கூச்சப் படுகிருள். தயங்குகிருள். உங்களுடன் தங்கிப் பேசிளுல் அவள் திருந்தி மனம் மாறக் கூடும். வெள்ளியன்று மாலை அவளை இங்கே அழைத்து வருகிறேன். மறுநாள் அதிகாலையில் நானே திரும்ப வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/110&oldid=565778" இலிருந்து மீள்விக்கப்பட்டது