பக்கம்:சுலபா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பார்கவி

"விமானத்திலேயா? ரொம்பச் செலவு ஆகுங்களே?' என்று இழுத்தார் சிவவடிவேலு.

சிவவடிவேலுவின் வெகுளித்தனத்தை ஆடிட்டர் வியந் தார். வேற வழியே இல்லை. முழுக்க இரயில் பிரயாணமே பண்ணினுல் பிரயாணத்திலேயே எட்டு ஒன்பது நாள் ஆகி விடும். குப்தா ரொம்ப பிஸி மேன். இன்னிக்குக் காலையிலே கல்கத்தா, மத்தியானம் அஹமதாபாத், மறுநாள் பம்பாய், அடுத்த நாள் டில்லின்னு அலையறவன். அவனோட வேலை அப்படி, நாம நேரே போய் அழைச்சிட்டு வரணும்.’’ என்று ஆடிட்டர் வற்புறுத்தினர்.

‘'நாம எதுக்குப் போகணுங்க? மதுரையிலேர்ந்து அந்த ஆளையே ஒரு டாக்ஸி பிடிச்சுக் குருபுரம் வரச் சொல்லிறலாம். அல்லது என் டாட்டர் பார்கவி மதுரையிலே ஹாஸ்டல்லே தங்கிக் காலேஜ்லே படிக்குது. அது போய் அவங்களை ஏர் போர்ட்டிலே சந்திச்சு ஒரு டாக்ஸி பேசி இங்கே அனுப் பிடலாமே? இங்கேயிருந்து நாம போற ஒரு டிரிப் பெட்ரோ லும், டயர் தேய்மானமுமாவது மிச்சம் ஆகுமே? இப்போ இருக்கிற நஷ்டத்திலே அதையாவது மிச்சப் படுத்தலாமே?"

ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. கல்ச்சர், மேனர்ஸ் இவற்றையெல்லாம் பற்றிச் சிவவடி வேலுவுக்கு எப்படிப் புரியவைப்பதென்று தெரியாமல் ஆடிட் டர் அனந்த் திணறினர். "நீங்க அப்படிச் செய்வது நல்லா இருக்காதுங்க. நம்ம வேலையா டில்லியிலிருந்து வருகிற ஒரு விருந்தினரை நாமே போய் அழைச்சிட்டு வர்றதுதான் முறை." -

"அப்படி நீங்க நினைக்கிறதா இருந்தால் சரி. நான் என்ன சொல்றதுக்கு இருக்கு?’ என்று வேண்டா வெறுப்பாக இணங்கினர் சிவவடிவேலு.

ஆல்ை குப்தாவும் அவன் மனைவியும் மதுரை வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அவர் மகள் சூட்கேஸும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/136&oldid=565804" இலிருந்து மீள்விக்கப்பட்டது