பக்கம்:சுலபா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pir, ear. 16 f

அவர் தொடங்கறப்பவே அது ஒல்டாயிடும். அத்தனை கைவிசேஷம் அவருக்கு அவர் கையாலே தொடங்கினப்புறம் பார்கவி எப்படி நியூவா' இருக்க முடியும்?"

'பார்கவி நியூவாகப் போகிருள் மிஸ்டர் குமரேசன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை."

"சும்மா கனவு காண்கிறீர்கள்! எங்கப்பா இருக்கிற வரை அது நடிக்காது. எங்கப்பா செல்லமர வளர்க்கிற"பார்கவிகள்’ இருவர். இருவருமே உற்சாகமாக இல்லை. ஒன்று இந்த மற்ருென்று என் தங்கை பார்கவி, அவரது செல்லப் பண்.'

'இல்லை மிஸ்டிர் குமரேசன். நீங்கள். உங்கள் சகோதரர் தண்டபாணி எல்லோருடைய ஒத்துழைப்பையும் கொண்டு நானும் ஆடிட்டரும் சேர்ந்து இரண்டு பார்கவிகளையுமே ஆரோக்கியமாக்கப் போகிருேம்."

"மிஸ்டர் குப்தா இங்கே எங்கப்பா வேலைக்கு வச்சிருக்கிற ஆட்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு இந்த நம்பிக்கை களத்து மேடுகளிலும் வயல் வரப்புகளிலும் எங்கப்பவோடு காரியஸ்தனுய்ச் சுற்றிக் கொண்டிருந்த கறும்பா யிரம் அந்த நாளிலேயே விவசாயக் கூலிகளுக்குத் தர வேண் டிய அஞ்சு பத்துலே கமிஷன் அடிக்கிறவன். அப்பாவைக் கண்டால் மட்டும் எழுந்து நின்னு கைகட்டி வாய் பொத்தி, *முதலாளி சொல்றபடி செய்யறேனுங்க” என்று குழைகிறவன். அவனை நம்பி போர்டிங்கை விட்டிருக்கிருர். வெளிவேஷமான பணிவும் பயபக்தியும் இருந்தாலே அவன் யோக்கியன் என்று கணித்துவிடுகிறவர் எங்கப்பா. இவர் கிட்டிே கல்யாணம் கார்த்திக்குத் தவசிப்பிள்ளையாயிருந்த இசக்கிமுத்துவைச் சாக்கு மாஸ்டராகவும் ஒரு ரிடையர்டு சப்ரிஜிஸ்திரார் ஆபீஸ் கிளார்க்கை ஸ்டோர் கீப்பராகவும் - அவங்க குறைஞ்ச சம்பளத்துக்கு ஒப்புக்கிட்டிாங்கன்னு-நியமிச்சிருக்கார்.உண்ணி மாதிரியும் அம்டை மாதிரியும் பார்கவியின் லாபத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/163&oldid=565831" இலிருந்து மீள்விக்கப்பட்டது