பக்கம்:சுலபா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பார்கவி

ஆரம்பித்தrள். நிறைய அடிக்கடி ஆங்கிலத்திலும் கொஞ்சம் இந்தியிலும் உரையாடத் தொடங்கிள்ை. திடீரென்று அழகாகி இருப்பதுபோல் அவள் தோற்றத்தில் ஒரு செழுமை தெரிந்தது. நியூ யார்கவியின் திறப்பு விழாவுக்குச் சுஷ்மாவின் தம்பி அஜித்குமாரும், அவனுடைய வயதான நோய்வாய்ப்பட்ட தந்தை குருசரனும் வந்து இரண்டு மூன்று நாட்கள் குருபுரத் தில் தங்கியபோது பார்கவி அஜீத்திடம் இழைவதைக் குமரேசன் கவனித்தான், அந்த இரண்டு மூன்று நாள் நெருக் கம் அதற்கு முந்திய நெருக்கத்தின் தொடர்ச்சி போலக் குமரேசனுக்குத் தோன்றியது. சுஷ்மா குப்தாவோடு அவளுடைய உடல் நலங்குன்றிய தந்தை குருசரணைப் பார்ப்பதற்காகப் பார்கவி முதல் முதலாகச் சிம்லா சென்ற போதே இந்த நெருக்கம் ஏட்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. -

குப்தா, தண்டபாணி, ஆடிட்டர் எல்லாருமே இந்தப் புதிய நெருக்கத்தைக் கவனித்தார்கள். இவர்களில் யாரும் இதைக் கண்டிக்கிற-அல்லது பொறுக்க முடியாத மனப் பான்மை உள்ளவர்கள் இல்லை என்பதால் இது எந்தப் பாதிப் பையும் உண்டிரக்கவில்லை. சிவவடிவேலுவோ ஆச்சி என்று எல்லாரும் மரியாதையாக அழைக்கும் திருமதி சிவவடி வேலுவோ அப்போது ஊரில் இருந்திருந்தால்தான் இது கொஞ்சம் கசமுசா ஆகி வெடிக்கும் போன்ற நிலைமையைத் தவிர்த்திருக்க முடியாது.

நல்லவேளையாகப் பிரதேசம், மாநிலம், திசை, மொழி எல்லாம் கடிந்த இந்தக்காதல் அரும்பத்தொடங்கிய சமயத்தில் சிவவடிவேலு இந்த நாட்டிலேயே இல்லை. ஆச்சியும் அவரோடு போயிருந்தாள். - - - -

ஓர் இளம் பெண்ணும். ஆணும் கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகுவது என்பது அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை என்று நினைக்கிற தாராள மனசு உள்ள இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/212&oldid=565880" இலிருந்து மீள்விக்கப்பட்டது