பக்கம்:சுலபா.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pr .೮೮ 215

தவசிப் பிள்ளை மலையில் கிடைக்கிற விறகுகளில் தாராளமாக அடுப்பெரித்து இட்டிலிப் பானையை ஏற்றி இறக்கினர். -

மலை மேலே வியாபாரம் டல்லாயிருந்த நாட்களில் இரன்டு பேரும் பழைய பார்கவி நாட்களை அசை போட்டினர்.

"ஒய் பண்டாரம் (இப்படித்தான் கரும்பாயிரத்தைத் தவசிப் பிள்ளை வழக்கமாக அழைப்பார்) நீரு அந்தப் பயலுக காதிலே பூ வைக்கப் பார்த்தீகு! அவனுக நம்ம காதிலேயே பூச்சுத்திப் போங்கடான்னு இப்படி வெளியிலே துரத்தி விட்டுட்டானுவ."

"இதர பாரும் தவசிப் பிள்ளை! எங் காதிலே எவனும் பூச்சுத்திவிடி முடியாதுன்னேன். நெனைவு தெரிஞ்ச நாளிலே ருந்து இன்ைெருத்தன் பூச்சுத்த வழியில்லாமே நானே என் காதிலே பூ வச்சுக்கிடுதேன். சிவவடிவேலு முதலாளி மட்டும் வரட்டும். பசங்களை என்ன பாடு படுத்தப் போருர்னு நீரே உம்ம கண்ணுலே பார்க்கத்தான் போlரு!'

அதெல்லாம் ஒரு பாடும் படுத்த மாட்டாரு! வீணு நீரு களுக் கண்டுக்கிட்டிருக்கீரு. பசங்க பார்கவியை ஃபைவ் ஸ்டார் ஓட்டல் கணக்கா ஆக்கிப் பழைய கடனை எல்லாம் அடைச்சி லாபத்திலே கொண்டு போயிட்டிருக்காங்க...சிவவடி வேலு இதைப் பாத்தே அசந்து போயிடப் போருரு...'

"இருக்கலாம் தவசிப் பிள்ளே! ஆலுைம் இந்தப் பொம்பிளைங்க விஷயம் அவருக்குப் பிடிக்காது. ஒரே சினிமாக் காரணு வந்து தங்கருனுவ. அதுவும் அவருக்குப் பிடிக்காது."

'அம். சும்மா இரும்யா! என்னமோ பொம்பிளே பொம்பிளைன்னு கரிச்சுக் கொட்றீரே. அவளுகளை ரொம்ப மரியாதையாத் தனி வீடு எடுத்துக் குடுத்துத் தங்க வச்சிருக் காங்க. நல்ல சம்பளம், போனஸ் எல்லாம் தர்ருங்க. டுட்டி முடிஞ்சதும் அதது தான் தங்கர வீட்டுக்குப் போயிடுது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/217&oldid=565885" இலிருந்து மீள்விக்கப்பட்டது