பக்கம்:சுலபா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ይሆ•tsF፡ 45°

இதைப் பலம் என்பதா, பலவீனம் என்பதா என்று. புரியாமல் கவிதாவும் மற்றவர்களும் சிரமப்பட்டார்கள்.

தன்னை இலட்சியம் செய்து மதித்தவர்களைச் சுலபா மதிக்காமல் அலட்சியம் செய்தாள். தன்னை அலட்சியம் செய்த வர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டாள். *

ஒரு குளோஸ்ப்-ஷாட்டில் மகா நிபுணரான கேமிராமேன் ஒரு கோணத்தை முடிவு செய்தபின் இவள் தன் முகத்தை அந்தக் கோணத்திலிருந்து படம் பிடித்தால் நன்ருயிராது என்ருள். **

"இல்லேம்மா! நான் சொல்றதைத் தயவு செய்து கேளுங்க! இது சோகக் காட்சி. இதிலே இதுதான் பிரமாதமா இருக்கும்’-என்று காமிரா நிபுணர் வாதிட்டார். இவள் நடிக்க வருவதற்கு முன்பே காமிரா நிபுணராகப் பெயரெடுத் திருந்தவர் அவர். -

அதற்கு ஒப்புக்கொண்டது போல் சுலபா மெளனமா. யிருந்து விட்டாள். ஆல்ை அன்றிரவே தயாரிப்பாளர் அவளைச் சந்தித்தபோது அவரது படத்தில் தான் மேற்கொண்டு, "நடிக்க முடியாது' என்ருள் சுலபா, 'ஏன்? என்ன காரணம்...யாராவது உங்க மனசு நோகும்படி நடந்துக் கிட்டிருந்தா எங்கிட்டச் சொவ்லுங்க"-என்ருர் தயாரிப் பாளர் . .

சுலபா மெளனம் சாதிக்கவே அவரது கோபம் அதிக மாயிற்று. -

"யார் என்ன செஞ்சாங்கன்னு சொல்லுங்கம்மா... இப்பவே அவனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப் பறேன்"

"என் தலை எழுத்து ஒரு காமிராமேனிட்டி நான் அவ மானப்படி வேண்டியிருக்குது."

அந்தக் காமிராமேன் ஒரு ஜென்டில்மேன் என்பது தயாரிப்பாளரின் அபிப்பிராயமாயிருந்தது. சுலபா காமிசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/45&oldid=565713" இலிருந்து மீள்விக்கப்பட்டது