பக்கம்:சுலபா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 SSPLio

எனக்கு பெரிய மானபங்கமாயிருந்தது கோகிலா. என்ன மானபங்கப்படுத்தாமலே அதைவிட அதிகமாக அவமானப் படுத்தி விட்டான் அவன்'

"ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதுதான் அவமானம் என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். நீயோ மானபங் கப் படுத்தக் கூட லாயக்கற்றவள் என ஒரு பெண்ணை ஓர் ஆண் ஒதுக்கியதன் மூலமே அவமானப்படுத்தியது பற்றிக் கூறுகிருய்."

"அந்த அளவுக்கு நான் கேவலமானவள். பலரிடம் சீரழிந்தவள் என்று என்னைப் பற்றி அவன் மிக மிக மட்டமாக நினைத்திருக்கிருன் கோகிலா!'

'நீ அவனை நினைத்து ஏங்கியிருக்கிருய்! அவன் உன்னைச் சாதாரணமாகக்கூட நினைக்கவே இல்லை’

"நினைக்காதது கூடத் தப்பில்லை. நான் ஏங்கியதை அலட்சியமே செய்திருக்கிருன் அவன். அவனைப் போல் ஒருத்தனை நினைத்து ஏங்க நான் தகுதியற்றவள் என்பது போல் கூட நடந்து கொண்டிருக்கிருன் அவன்.'

'ஆன் பிள்ளையின் திமிர்களில் மிகவும் குருமானமன்னிக்க முடியாத திமிர் இது’’ -

"ഭുകു அவன் அகப்பட்டால் கூட அந்தத் திமிருக்குப் பழி வாங்குவேன். இன்னும் நான் தீர்க்கமுடியாத பழங் கணக்கு அது’

"நான் அநுமானித்தது சரிதான் சுலபா’’

"என்ன அநுமானித்தாய் நீ?"

"யாரொருவர் மனப் பரப்பில் வெறுப்பும் விரக்தியும் நிசாசையுமாக மிதக்கின்றனவோ அவருடைய அடிமனத்தில் இந்த உணர்வுகள் மிதக்கக் காரணமான ஏதாவது ஒர் ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஒர் ஆசைமட்டும் வற்றி விடுமானல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/60&oldid=565728" இலிருந்து மீள்விக்கப்பட்டது