பக்கம்:சுலபா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சுலபா

கூட முடியாமல் இருந்தது. கோகிலா அதைச் சொல்லிய விதத்தில் சுலபாவின் ஆவல் கிளர்ந்து விட்டிருந்தது. அது என்ன வென்று தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்று துடித்தாவி அவள்.

"உனக்குப் புரியலேன்ஞ அதை மறந்துடு சுலபா... வொர்ரீ பண்ணிக்காதே. நேரே பார்க்கறப்பச் சொல்றேன். ஃaோனில் வேண்டாம்’

'சஸ் பென்ஸ் எல்லாம் வேணும். இப்பவே சொல்லிடு கோகிலா’’

கோகிலா கலகலவென்று ஃபோனிலேயே இரைந்து சிரித்தாள். -

"என்னடி நான் கேட்கிறேன். நீ பாட்டுக்குச் சிரிக்கிறே?"த

കണേ... ിക്കേrമേ வேற என்ன பண்ணுவாங்க... இதைப் போயி ஃபோனிலே விளக்குன்ன சிரிப்புத்தான் வரும்:

'நிமிஷத்துக்கு நிமிஷம் சஸ்பென்ஸையும் அதிகமாக்கி விஷயத்தையும் என்னன்னு சொல்லாமக் கழுத்தை அறுக்கிறத் துக்குப் பதிலா நீ இதைப் பத்தி எங்கிட்டப் பிரஸ்தாபிச்சே இருக்க வேணும்டி கோகிலா" ጎ -

'இது "ஏ" விஷயம். அடல்ட்ஸ் ஒன்லி. ஃபோன்ல சொல்லமுடியாது. நேரே பார்த்தால் கொஞ்சம் டெமான்ஸ் ரேட் பண்ணிக் கூட விளக்கிட முடியும்'

இப்போது சுலபாவுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியவும் இல்லை. செக்ஸ் விஷயம் என்று மட்டும் விளங்கியது. - -- -

பொல்லாதவடி நீ ஆரம்பிச்சு விட்டுடுவே! முழுக்கச் சொல்லாமல் இப்படித்தான் சித்திரவதை பண்ணுவே. இது உன் வழக்கமாவே போச்சு சீக்கிரமா நீயே நேரில் வந்து சொல்லப்பாரு' என்று கூறி டெலிஃபோனை வைத்தாள் சுலபா, - - - . . ... •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/78&oldid=565746" இலிருந்து மீள்விக்கப்பட்டது