பக்கம்:சுலபா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ծ եմtitr

'உன் துணிச்சல் வேற யாருக்கும் வராது.டீ கோகிலா" "நீ இப்பிடிப் புகழறே அவராளுப் பம்பாய், கல்கத்தா டில்லியிலே பெரிய பெரிய கோடீசுவர பிஸினஸ் மேகனெட் களோட மனைவிமசர்கள் கத்துக்கிட்டிருக்கிற டேக்டிஸ்’ல நூற்றுலே ஒரு மடங்குகூட நான் கத்துக்கலேன்னு குறைப் பட்டுக்கிருகு, அவங்க இன்னும் மாடர்னு இன்னும் அப்டு டேட்டா இருக்காங்களாம். புருஷன் இல்லாதபோது தேடிவர்ா பிஸினஸ் பார்ட்னர்ஸுக்குக்கூட உன்ளே கூப்பிட்டு உட்கார வச்சு டிரிங்க்ஸ் ஸெர்வ் பண்ருங்களாம்’

"ஆரம்ப நாளிலே சினிமாவிலே நாங்க இப்பிடி எத் தனையே பண்ணியிருக்கோம் ஒரு மிஷினி மாதிரிப் பணக் காரங்களை, முதலீடு செய்யிறவங்க்ளை விநியோகஸ்தர்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கோம்.' -

"இருக்கலாம். ஆல்ை அது வேற, இது வேற. இதுவே வெறும் சரீர சந்தோஷம் மட்டும் பத்தாது. இண்டெலக்சுவல், ப்ளெஷர் முக்கியம், அவங்களோட அரசியல் முதல் "குக்கெரி' வரை இங்கிலீஷ்ல சரளமா உரையாடணும். ஜோக் அடிக் கணும். அவங்க ஜோக்கடிக்கிறப்ப அது சுமாரான ஜோக்கா யிருந்தாலும் பிரமாதமா ரசிச்சுச் சிரிக்கணும். அவங்க ரொம்ப "ஸ்மார்ட்’னு நாலுதடவை அவங்க கிட்டவே சொல்லிப் புகழனும் அவங்க நம்மைப் புகழறப்போ அதைச் சடங்கு மாதிரி ஏற்கமே முகம் சிவக்கப் புன்னகை புரிந்து வெட்கப் படிறமாதிரி நடிக்கனும். - "ஹேவ் ஸம் மோர்...' என்று அதிகமாகப் பருகச் சொல்லி உபசரிக்கணும். நிறைய இங்கிதங்களைப் பயன்படுத்தி இங்கிதக் குறைவான காரியங்களைக் காதும் காதும் வச்சாப்ல சாதிச்சுக்கணும். ஒரு "கால்கேர்ளுக்கும் புரொஃபஷனல் ஹோஸ்டெஸ்ஸுக்கும் இப்படி நிறைய வித்தியாசம்லாம் இருக்குடி சுலபா!' . . - . . இதைக் கேட்டுச் சுலபாவுக்குச் சுரீரென்றது, கோகிலா தன்னைக் "கால்கேர்ள்’ என்கிருளோ என்று பட்டது. ஆளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/86&oldid=565754" இலிருந்து மீள்விக்கப்பட்டது