பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“பொய்...பொய்மா...இவன் என் ஜாமட்ரி பாக்ஸை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்...”

இந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.

மூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்தது...ஆனால்...?

பெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்... ‘க்ளோஸெட்’டை ஃப்ளஷ்’ செய்யக் கூடாது?

கிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.

மாமியாருக்குக், கெய்ஸ்ரைப் போட்டுவிட்டு, கடைக் குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.

மாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளிவரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.

பரத்துக்குக் காலை நேரத்தில்சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து