பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

111


“நான் ஒரு மணிக்கே முடிச்சிட்டேன்...அது சரி, இப்ப என்ன செய்யப்போறீங்க கிரி?”

“அவள் தலைகுனிந்து கீழே விரலால் நெருடிய வண்ணம், மெளனமாக இருக்கிறாள்.

“என்ன நடந்தது, இன்னைக்குக் காலையில?”

கிரிஜா, சுருக்கமாக, அவன் கிளம்பிச் சென்ற நேரத்திலிருந்து, ரோஜா மாமியின் பெட்டி விவரம் உட்பட எடுத்துரைக்கிறாள்.

“பூ...ரெய்ட் தான் பேப்பரில் எல்லாம் வந்து சந்தி சிரிச்சாச்சே? ஸோ, சாமுவும் இதில் இன்வால்வ்ட்?...”

“அதென்னமோ தெரியாது. எனக்கு இப்ப, கவிதாவையும் சாருவையும் பத்தித்தான் கவலை. அந்தக் குழந்தைகளை தாயும் பிள்ளையுமா, எப்படி நடத்துவான்னு நினைக்கவே முடியல...இப்ப. இப்ப, நான் அங்கே இருந்து வெளியே வந்ததுக்குக் காரணமே, அவங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைக்கணும், ஸெல்ஃப் ரிலயன்டா, அறிவினால் மேம் பட்டவர்களாக வளர்க்கணும்னு. இந்த பாஷ், ஸ்கூல்: காலேஜ் இதுவெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பயமா யிருக்கு...”

‘பையனைப் பற்றிக் கவலை இல்லையா, பஹன்ஜி?...’

“...அவனை விடமாட்டாங்க. ரோபோ வாங்கித் தரேன்: ரிமோட்கன்ட்ரோல் பிளேன் வாங்கித் தரேன், அம்மாவை மறந்துடுன்னு காலமே சொல்லிட்டிருந்தார். நான் ஏன் போனேன், என்மனம் எப்படி நொந்து போயிற்று என்பதை அறியத் துளியும் மனமில்லாமல், உடனே சேற்றை வாரி இறைத்து, இந்த வீட்டை விட்டுப்போ என்று துரத்துபவர்கள்...மனிதர்களா?...பிள்ளையையும் அதே போல் வளர்ப்பான் ...”