பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

சுழலில் மிதக்கும் தீபங்கள்


வழிச்சேன்னு சொன்னமா? ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா? உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது?...இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஒடிப்போவாளா?... என்னமோ, ரெண்டு பெண்ணை வேறு வச்சிட்டிருக்கோம். அதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகுமோன்னு உருகிப்போயிட்டான். அதை உத்தேசிச்சானும் நீ இப்படி தரக்குறைவா நடந்திருக்க வேண்டாம்...”

கிரிஜாவுக்கு முகம் சிவக்க ஆத்திரம் பொங்கி வருகிறது,

“நான் என்ன தரக்குறைவா நடந்துட்டேன்? நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட் டேன்...?”

“இன்னும் என்னடியம்மா பண்ணனும்? ஆனானப்பட்ட சீதையையே லோகம் பேசித்து. அக்கினிப் பிரவேசம் பண்ணினப்புறமும், உனக்கு ஒண்ணுமில்ல. துடைச்சுப் போட்டுட்டுக் குடும்பத்தைவிட்டு ஒடிப்போயிட்ட, இருக்கிற வாளுக்கு மானம் மரியாதை இல்லை...?”

“இதைச் சொல்லத்தான் இங்க வந்தீங்களா?...'

“உன் சாமானெல்லாம் இருக்கு பாத்துக்கோ, கண்டதுகளும் வந்து மானம் மரியாதை இல்லாம கத்தறது. மானமா இருந்தோம், அது போயிட்டது. எல்லாம் இருக்குன்னு இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத்தரச் சொன்னான்...”

பெட்டியைத் திறக்கிறாள். அட்டை ஃபைலில் அவளுடைய கல்வித் தகுதி மற்றும் சான்றுகள்...அதன்மேல்