பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

117


பத்தாயிரத்துக்கு ஒரு செக். அதை எடுத்து வெறித்துப் பார்க்கிறாள்.

“இதென்ன, நாய்க்குப் போடும் எலும்புத்துண்டா?... எடுத்திட்டுப்போங்க!” விசிறி எறிகிறாள்.

அவள் குரலின் கடுமையில் மாமியார் பின்னடைத்திருக்க வேண்டும். வீசிய காகிதம் அவள்மேல் விழுகிறது. குத்தப் பட்ட செருக்கை விழுங்கிக்கொண்டு வெளியேறுகிறாள். மாயா “தீதீஜி...!” என்று கண்ணிரைக் கொட்டியவளாகப் போகிறாள்.

கிரிஜா வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள்.

எந்த அரவமும் செவிகளில் விழவில்லை. ரத்னாவும் ஆனியும் இன்னுமா ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார்கள்? எங்கே போனார்கள்?...


15

ஏதோ நினைத்துக்கொண்டவளாக அவள் வராந்தாவுக்கு வந்து கீழே பார்க்கிறாள். அந்த முன் வாயில் நடை பாதையை ஒட்டி, ஒரு கூட்டம் கூடியிருக்கிறது. சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் போகவில்லை.

ஏதேனும் விபத்தா?...ஆனால் விடுதிச் சுற்றுச்சுவருக் குள்ளும் கூட்டம் நிறைந்திருக்கிறது?

கப்பென்று நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறது ஓர் அச்சம்

ரத்னாவும் ஆனியும் ஏதேனும் விபத்தில்...சு-8