உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

யில்லை என்னும் காரணங்களால் பல தொடர்கள் திருத்தப்பட்டு விட்டன. அவை... பொருட்காட்சி சாலையில் இருக்கின்றன முதலியவைகளில் எழுதியதாக; ஆதிநாள் இருந்து என்பன போன்றவை எடுத்துக் காட்டுப் பகுதிகளில் அமையும் தொடர்கள். இவற்றுள் முறையே,

அவை என்பது இத்தகடுகள் 6 எனவும், முதலியவைகளில் என்பது முதலியவற்றில் எனவும், ஆதிநாள் இருந்து என்பது ஆதி நாளிலிருந்து எனவும் திருத்தப்பட்டன. இத்திருத்தங்கள் யாவற் றையும் மீண்டும் திருத்திப் பழைய வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று. இச்செயல்களுக்காக இந்த எடுத்துக்காட்டுத் தொடர்கள் அமைந்த நூல்களைத் தேடிச் சரி பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது.

வில்லிபுத்தூரார் என்ற பெயர் வில்லிப்புத்தூரர் என்று திருத் தப்பட்டது. இது எந்தப் பதிப்பிலும் இல்லாத ஒன்று. வை. மு. கோபால கிருஷ்ணமாச்சார்யார் என்பதும் பதிப்பில் உள்ளமுறையே இது...மாச்சாரியர் என்ற முறைக்கு மாற்றப்பட்டது. வி.ஐ சுப் பிரமணியம் என்பது நூலில் காணப்படும் முறை. இது சுழிக்கப் பெற்று வ. ஐ. என்று மாற்றப் பெறுகிறது. கோபால் ஐயர்

என்பதும் இவ்வாறே கோபால ஐயர் என்று திருத்தப் பெறுகிறது.

ஒரு இயல், ஒரு ஏடு போல்வன ஓர் இயல், ஓர் ஏடு என்று திருத்தப் பெற்றுள்ளன. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் ஒரு என்றாதல் உண்டு (தொல்.439). அந்த ஒரு என்பதன் முன் உயிர் முதன் மொழி வருமொழியாக வந்து புணருங்கால் உகரங்கெட்டு முதல் நீண்டு ஓர் என்றாகிப் புணரும் என்பது விதி (தொல். 455). இதன்படி ஓரியல், ஓரேடு என்று இணைந்து நிற்கும். பிரிந்து நிற்கும்போது ஒரு இயல் ஒரு ஏடு என்று நிற்குமே யல்லாது, ஓர் ஏடு என்று எழுதுவது கட்டாயமன்று. கல் + தூண் = கற்றூண் என்றாகும். பிரிந்தால் கல் + தூண் என்றாகுமேயன்றி கற்தூண் என்றாகாது; நற்றாள் - நற்தாள் என்பதும் அவ்வாறே

இத்தகையனவே ஓர் இயல், ஓர் ஏடு என்பனவும்.

இவ்வகைக் காரணங்களால் பெரும்பாலான திருத்தமுறை களை மேற்கொள்ள இயலாமற் போயிற்று என்பதைத் தெரி வித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பூ.சு

சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/12&oldid=1571081" இலிருந்து மீள்விக்கப்பட்டது