உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

என்ற அடிக்கு "பனையேட்டில் ஆணி கொண்டெழுதிய எழுத் துகள் நன்கு விளங்குமாறு மை பூசித் துடைப்பது வழக்கமாகலின் இருளெனும் அஞ்சனந்தடவி... என்றார்” என்ற விளக்கமும் காணப் பெறுகிறது. இவற்றுள் குறிப்பிடப்பெறும் மையினையே எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்தும் வழக்காற்று அடிப் படையில் விளக்கின் மை என்றோம். நடைமுறையில் இல்லாத பொருளன்று.

'பொதுத்தலைப்புகள் - பெரும் பிரிவுத் தலைப்புகள் பக்க மத்தியில் அமையுமாறு வேறுபட்ட பெரிய எழுத்தில் தரப்படுதல் வேண்டும்' என்பது ஒரு கருத்துரை. தட்டச்சுப்படியில் இயல் தலைப்புகள் அனைத்தும் இடைப் பகுதிலும் உட்தலைப்புகள் இடது ஓரப்பகுதியிலுமே கொடுக்கப் பெற்றுள்ளன. வேறுபட்ட பெரிய எழுத்துமுறை அச்சில் தானே செய்ய முடியும்?

'உள்தலைப்புடன் சேர்த்து விளக்கப் பகுதி தொடருமாயின் () டாஸுக்குப் பதில் கோலன் குறி (:) இடலாம். கோலனும் டாஸும் ஒருங்குதருதலும் அமையும்" என்பது அடுத்த கருத்துரை. கருத்துரை கூறி நூலாசிரியரின் முடிவுக்கு விடுவது விரும்பத்தக்கது. ஆனால் நூலுள் முறையாக அமைந்த சிறுகோடுகளைச் சுழித்து இரண்டிரண்டு புள்ளிகளை வைத்துத் திருத்தம் செய்யப் பெற்றி ருந்தது. மேலும் 'உள்தலைப்பு தனிப்படத் தராத நிலையில் கோலன் () குறியீடு பொருத்தமாம், யாண்டும் சீரான முறை தொடர்க' என்றெல்லாம் ஆங்காங்கு குறுக்கே எழுதப்பட்டும் இருந்தது.

சமக்குறியும் விளக்குங்குறியும் பெரும்பாலும் வழக்கற்ற நிலை நூலுள் சுட்டப் பெற்றுள்ளது. வேறுபாடு காட்டுமிடங்களில் மட்டும் இருபுள்ளியிடும் முறை நூலுள் இடம் பெறுகிறது. உள்தலைப்புகள் முழுமைக்கும் சிறுகோடு இடும்முறையே ஒரு சீராக மேற்கொள்ளப் பெற்றுள்ளது. அவ்வளவும் சிகப்பு மையினால் சுழித்துத் திருத்தப்பட்டுவிட்ட நிலையில் அனைத்தையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப் பெரும் பாடுபட வேண்டிய தாயிற்று.

'கி.பி. 1947இல் நடைபெற்றது' என்பது நூலில் கையாளும் முறை. "இப்பிரதி கி. மு. 2500-ல் எழுதப் பெற்றது. கி.மு. கி. மு. 3850-ல் முடி சூடியவர்” என்பன எடுத்துக்காட்டுத் தொடர்கள் (பக்.29). 'இம்முறையில் உருபு இணைப்புத் தருவதாயின் நூல் முழுமையும் ஒரே சீராக` என்று குறிப்பு எழுதி 'இ' கரம் சேர்த்துத் திருத்தப் பெற்றது. இவ்வாறே நடை சரியில்லை, தொடர் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/11&oldid=1571080" இலிருந்து மீள்விக்கப்பட்டது