உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

திருவாரூர் என்பது, சுற்றோர் என்போர், அருகர் ஆனவர் என்பனபோன்று பெயர்களை விளக்க டையிலே வரும் சொல் லுருபுகளைப் பிரித்து அமைக்கக் கூடாது' என்பது நூலில் தந்துள்ள செய்தி, (பக். 283) சொற்களைப் பிரித்து அமைத்துக் காட்டி இது போலப் பிரித்து அமைக்கக் கூடாது என்றுதான் குறிப்பிடப் பெறுகிறது.

பிரித்துத் தந்திருப்பது பொருந்துமா? இப்படி ஒரு வினாவைக் குறுக்கே எழுதி அத்தொடரின் அடியில் கோடிட்டுக் காட்டப் பெற் றிருக்கிறது. ஆனால் தனியே எழுதிய கருத்துரையில் 'பக்கம் 283-ல் சொல்லுருபுகள் பிரித்து அமைத்தல் கூடாது என்பது வளரும் தமிழுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடப்படுகிறது. என்ன பொருள் என்பதே தெளிவாகவில்லை. 'சொல்லுருபுகள் பிரித்து அமைத்தல் கூடாது' என்று குறிப்பிட்ட தொடரே சரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருஞ்சொல் அகரநிரல்,

அருஞ்சொற்பொருள்

அகரநிரல் பிறமொழிச் சொற்கள், தலைவர், நாடு, ஊர்...ஆகிய சிறப்பு அகரநிரல்களைத் தொகுத்து அமைக்கலாம் என்னும் கருத்து சொல் லடைவு என்னும் தலைப்பின் கீழ், அவற்றின் பயன் உட்படத் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளது. ஆனால்,

0

"பக்கம். 302-ல் அகராதிகள் பற்றிக் கூறுமிடத்து, அரும்பதம் முதலியவற்றின் அகராதி, சிறப்பு பெயர் அகராதி, பொருட்குறிப்பு அகராதி போல்வனவும் நூலின் தன்மைக்கு ஏற்ப இடம் பெற லாம்.உரை நடை நூல்களுக்கும் காவியம் போன்றவற்றிற்கும் அவை அவசியமாகும்' என்னும் கருத்துக்கள் நூலின் குறுக்கும் அவற்றைப் புரிந்து

நெடுக்குமாகக் கிறுக்கப் பெற்றுள்ளன.

கொள்ளப் பெருமுயற்சி தேவைப்பட்டது.

விளக்கின்மை ஒரு பூசு பொருளா என்ற வினாவை எழுதி விளக்கின்மை என்ற சொற்கள் இருந்த இடமெல்லாம் பெரியதாகச் சுழிக்கப்பட்டன.

66

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்"

(தமிழ்விடுதூது-25) என்னும் அடிகளுக்கு 'மஞ்சட்குளிப்பாடல், மையிடல். சுவடிக்கும் குழந்தைக்கும் பொது. படிக்கத் தொடங்குகையில் எழுதிய ஏட்டில்... எழுத்து விளங்க மைக்காப்புச் சாத்துதல் பண்டைக்கால வழக்கம்? என்று விளக்கம் தருவர்.

  • ஆய ஏட்டினை இருளெனும் அஞ்சனந் தடவி

(திருவிளையாடல் 60:9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/10&oldid=1571079" இலிருந்து மீள்விக்கப்பட்டது