உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

விரிவாகச்

இடைச்

இன்பத்தில் முழுகி... நூலின் சுருக்கமான செய்திகளை சொன்னால் மேலும் சுவையாக இருக்கும் என்னும் நோக்கத்தால் நிகழ்வதாகும் என்பது போன்ற பல விளக்கங்கள் செருகலைக் குறித்து முன்பே இந்நூலில் கூறப்பெற்றுள்ளனவே. (பக். 145)

பதிப்பாசிரியருள் ஒருவர் 'களவிற் கூட்டம்' என்று பதிப்பித்துக் கனவிற் கூட்டம்' என்பதை வேறுபாடு காட்டினார்; மற்றொருவர் கனவிற் கூட்டம்' என்பதைப் பதிப்பித்துக் 'களவிற் கூட்டம்' என்பதை வேறுபாடு காட்டினார் என இருவேறு பதிப்பு முறைகள் பதிப்புகளில் உள்ளவாறே நூலுள் எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன. (பக். 219) இரண்டிலும் கனவிற் கூட்டம் என்பதைச் சுழித்துக் கனவில் கூட்டம் எனத் திருத்தினார்கள். நாம் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணி இருவேறு பதிப்புகளையும் தேடித் திரிய வேண்டிய நிலையில் ஏற்பட்ட உழைப்பும் உழைப்பும் கால கால இழப்பும் பெருந்தொல்லையைத் தந்தன என்பது எனக்கு மட்டுந்தான்

தெரியும்.

'தாள் சுவடிகள்' என்று குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் அத்தொடரைச் சிகப்பு மையினால் பெரியதாகச் பெரியதாகச் சுழித்திருந்த முறை, அத்தொடர் கருத்துரை வழங்கிய பேராசிரியரைப் பெரிதும் சுட்டெரித்தது போன்று காட்சியளித்தது. மேலும் 'தாள் சுவடிகள், தாட்சுவடிகள் எப்படி எழுதினாலும் இந்நாளைக்குப் பொருந்தா- காகிதச் சுவடி என்பது இயல்பாயும் எளிமையாயும் இருக்கும்' என்ற தொடர்களையும் குறுக்கே எழுதியிருந்தார்கள்.

சுவடி

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம். தமிழ் அகராதி பேப்பர் என்ற சொல்லுக்குப் பல தொடர்களிலும் தாள் என்ற சொல்லையே ஆளுகிறது. அரசினர் சுவடி நூலகச் அட்டவணைகள் பலவற்றிலும் தாள் என்ற சொல் பல ஆண்டுகளாகவே கையாளப் பெற்று வருகிறது. இவ்வளவு ஏன்? வினாத்தாள், விடைத்தாள் என்று தானே மாணவ L மாணவ நிலையிலும் வழங்கப் பெற்று வருகிறது? தாள் குப்பை என்பதில்லை; காகிதக் குப்பை என்பதுதான் வழக்காறு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுவடி எண்ணைக் குறிக்கும்போது ஆர்.எண், டி.எண் என்று குறிப்பது அரசினர் சுவடி நூலகச் சுவடி நூலகச் சுவடிகளுக்கு உரிய முறை என்பதும், பிறநூலகச் சுவடியாயின் நூலகப் பெயர் தரப் பெற் றுள்ளது என்பதும் முன்னுரையில் தெளிவாகவே கூறப்பெற் றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/9&oldid=1571078" இலிருந்து மீள்விக்கப்பட்டது