உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii.i

பெற வேண்டும் என்றது எந்த வகையில் பொருந்தும் என்பது விளங்கவில்லை.

"உத்தர கெளத்தற் கொருமகனாகி"

வேறுபாடு: "உத்தரன் கவிப்பற் கொருமகனாகி"

என்னும்

(Awiy : 15; 178-179)

என்னும் வேறுபாட்டுத் தொடர்களைத் தனியே எடுத்துக்காட்டி, உத்தரன் கவிப்பற் கொருமக னாகி-என்று பாடமோதி இக்குரங்கு உத்தரன் பெயரோடு... பிறந்து என்பாருமுளர்" என்று காட்டுவார் அடியார்க்கு நல்லார் என்பது நூலில் குறிக்கப் பெறும் செய்தி (பக். 13(0) இதில் வேறுபாடு என்று குறிப்பிட்ட 'உத்தரன் கவிப்பற்...னாகி' என்ற அடியைச் சுழித்துப் 'பாடமும் வேறுபாடும் ஒன்றே! கூர்ந்து நோக்குக” என்று குறுக்கே குறிப்பு எழுதி 'ன கரஒற்று நீக்கப் பெற வேண்டும் என்று சுட்டியுள் ளார்கள். இதில் திருத்தம் பெற வேண்டுவது எதுவுமே இல்லை.

சூடாமணி நிகண்டு என்னும் நூலின் சுவடியில் கூறப்பெறாத... செய்யுட்களை இயற்றி, அவற்றை அந்நூலின் இடையிடையே கோத்துச் சுமார் அறுநூறு செய்யுட்களைக் கொண்ட நூலாக... வெளியிட்டுள்ளனர்' என்பது அரும்பொருள் விளக்க நிகண்டு என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்ற மேற்கோள் செய்தி. (பக். 164)

'சூடாமணி நிகண்டில் வேதகிரியார் இடைச்செருகல் செய் தார் என்பது பொருத்தமன்று. அவர் முயற்சி நூலின் விரிவாக்க மாகும். இந்நிகண்டில் 583 பாடல்களே உள, 600 செய்யுட்கள் கொண்ட நூல் என்று குறித்தது தவறு" என்று தவறான செய்தி என்னும் தலைப்பில் குறிக்கிறார்கள். மேலும் 'நல்லாப்பிள்ளை தாம் இயற்றிய பாரதத்தில் வில்லிபாரதச் செய்யுட்களை இடை யிடையே எடுத்துக் கொண்டது போன்றது வேதகிரியார் முயற்சி" என்றும் குறிப்பிடுகிறார்கள். (பக்.164)

விரிவாக்கம் என்பது நூலாசிரியரே செய்வது. நூலாசிரியரைத் தவிர்த்த வேறு ஒருவர், வேறுபாடல்களைத் தாமே இயற்றியோ வேறு நூலிலிருந்து எடுத்தோ ஒரு நூலின் இடையிடையே சேர்ப் பாரேயானால் அச்செயலை இடைச் செருகல் என்று தானே கூற வேண்டும்?

இவ்வாறு இடையே ஏற்படும் சேர்க்கை மூல நூலாசிரியருக்கு மாசு கற்பிக்க வேண்டுமென்ற நோக்கமுடையதன்று.

மூல நூலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/8&oldid=1571077" இலிருந்து மீள்விக்கப்பட்டது