உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

மட்டுமே

சுவடி, ஆய்வு, பதிப்பு என்பனவே நூலில் அமையும் முப்பெரும் பகுதிகள். சுவடி இயல் என்பது உள்தலைப்புகளில் ஒன்றே. ஆய்வு என்னும் பகுதியில் பாடவேறுபாடு பற்றிய ஆய்வும் மூலபாட ஆய்வும் அடங்குகின்றன. மூலபாட ஆய்வு என்று தலைப்பு கொடுக்க இயலாது. சுவடி ஆய்வு என்று கொடுத்தால் பதிப்பு என்ற தலைப்பும் சுவடிப் பதிப்பு என்று அமைய வேண்டும். மூன்று தலைப்புகளும் சுருக்கமாக ஒவ்வொரு சொல்லால் அமைக்கப் அவற்றுள் ஆய்வும் பதிப்பும் சுவடியைப்

பெற்றவையாகும்.

பற்றியனவே என்பது தெளிவு.

"சுவடியியல் அல்லது

சுவடி இயல் என்று எந்த வடிவம் இந்நூலுள் ஏற்கப்படுகிறதோ அவ்வடிவமே நூல் முழுமையும் ஆளப்பெறுதல்தான் முறை” என்று சுட்டியுள்ளார்கள்.

தலைப்பு முதல் நூல் முழுமையும் சுவடி இயல் என்றே ஆளப் பெற்றுள்ளது. உடம்படு மெய்யோடு கூடிய சுவடியியல் என்ற தொடருக்கும் பிரித்து வழங்கும் தொடருக்கும் ஒலி வேறுபாடு ஏதுமில்லை; பிரித்து அமைப்பது ஒலிப்பு முறைக்கும் எழுது முறைக்கும் தெளிவாக இருக்கிறது; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடி இயல் வகுப்பறைக்கான பெயர்ப் பலகையில் இந்த முறையே கையாளப் பெற்றுள்ளது. (நிறுவனச் சுவடிஇயல் பாடத்திட்ட உருவாக்கத்தில் பேராசிரியிர் மு. சண்முகபிள்ளை அவர்களுக்கும் பங்கு உண்டு என்னும் கருத்துகளை, ஆய்வேட்டின் வாய்மொழித் தேர்வின்போது எழுந்த வினாக்களுக்கு விடை யிறுத்துத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். அனைவராலும் இந்தக் தொடர் ஏற்றுக் கொள்ளப் பெற்றது.)

ஏதேனும் ஒரு வடிவம் ஏற்கப்படலாம் என்று சுட்டிய கருத் துரையாளர் அவர்கள் நூல் முழுமையும் சுவடி இயல் என்பதைச் சுழித்துச் சுவடியியல் என்று திருத்தியுள்ளார்கள். அவை மீண்டும் பழைய வடிவத்திற்குக் கொண்டு வரப் பெற்றன.

நீடாழி உலகத்து என்று தொடங்கும் வில்லிபாரதத் துதிப் பாடலின் மூன்றாவது அடி,

“ஏடாக வடமேரு வெற்பாக அங்கூரெழுத்தாணிதன்” என்றே பல பதிப்புகளிலும் காணப் பெறுகிறது. (பக். 34 அச்சில் வேறு) அவ்வடியை,

“ஏடாக மாமேரு வெற்பு அங்கூரெழுத்தாணிதன்" திருத்தியிருந்தார்கள்.

என்று

வெற்பாக என்பது வெற்பு என மாற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/7&oldid=1571076" இலிருந்து மீள்விக்கப்பட்டது