உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வாயப்பினை

அரசினர் சுவடி நூலகத்தில் பணியாற்றும் 1963இல் பெற்றேன். அதுமுதல் பணியில் பல நிகழ்ச்சிகள் ஏற்பட்டன; அவற்றில் பல ஐயங்கள் தோன்றின; பல சிக்கல்கள் ; ஏற்பட்டன; அவற்றால் பலவகை எண்ணங்களும் கருத்துகளும் உருவாயின. இவை நிறைந்து தேங்கிக் கிடந்த காலத்தில், 1979 அக்டோபரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சுவடி இயல் பயிற்சி வகுப்பு ஒன்றினைத் தொடங்கியது; அதில் பணியாற்றும் வாய்ப் பினை எனக்கு அளித்தது. சுவடி நூலகத்தில் ஏற்பட்ட அனுப வங்களும், பயிற்சி வகுப்பினை நடத்த வேண்டிய சூழ்நிலையும் இணைந்து 'சுவடி இயல்-ஓர் ஆய்வு' என்னும் இத்தலைப்பில் ஆய்வு செய்ய என்னைத் தூண்டின. அத்தூண்டுதல்களில் குறிப் பிடத்தக்க சிலவற்றை மட்டும் இங்குச் சுட்டுவது இன்றியமையாத அடிப்படையாகும்.

நிகழ்ச்சிகள்

மேலதிகாரிகள் அதை

தனியாரிடமிருந்து கிடைக்கும் சுவடிகளை நூலகத்தில் வாங்கி வைக்கவேண்டும். கொண்டுவரும் சுவடிகளின் உரிமையாளருக்கு ஏதேனும் பணம் பெற்றுத் தருவது கடமை. அனுமதிக்க வேண்டும். கிடைத்துள்ள சுவடிகளைப் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்து, அவற்றை விலை கொடுத்து வாங்க இசைவு தருமாறு கேட்போம்.

இச்சுவடிகள் இதுவரை அச்சாகவில்லையா?

இவற்றைப் போன்ற சுவடிகள் வேறு இந்த நூலகத்தில் இல்லையா?

வேறு எந்த நூலகத்திலுமே இல்லையா?

சுவ-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/17&oldid=1571086" இலிருந்து மீள்விக்கப்பட்டது