உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சுவடி இயல் என்பன போன்ற பல வினாக்கள் எழும். முழு விவரமும் முதலில் அனுப்பப்பட்ட கடிதத்தில் விளக்கமாக இருக்கும்.

யாப்பருங்கலம், கப்பல் சாத்திரம் (அரசினர் சுவடி நூலகப் பதிப்புகள்) ஆகிய சுவடிப் பதிப்புகள் பலவற்றைக் காணும்போது பதிப்பு முறைகளைப் பற்றி நினைக்க நேர்ந்தது; பிழை மலிந்திருந் ததையும் சிந்திக்க முடிந்தது.

எகர

ஒகரங்கள் புள்ளிபெறும் நிலையினால், உயிர்மெய் நெடில்கள் புள்ளியின்றி குறில்போல எழுதப்பட்டுள்ளன. அவற்றை அவ்வாறே வெளியிட்டிருந்த நூல்களையும் காண நேர்ந்தது. வேண்டாதவிடத்து நெடிலாகவும் அச்சிடப்பட்டிருந்தன.

இவ்வாறு சுவடிகள் திரட்டுவது முதல் அச்சு நூல்களைக் காண்பது ஈறாகச் சுவடி நூலகப் பணிகளில் பல நிகழ்ச்சிகள், கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றில் பல சிக்கல்கள் நாள் தோறும் நிகழ்ந்து வந்தன.

சிக்கல்கள்

படியெடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுவோர் அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள். ஆறாவது வகுப்பு, ஏழாவது வகுப்பு படித்தவர் களும் இருந்தனர். அதிகாரிகளின் ஆணையின்படி, புலவர்கள் எழுத வேண்டிய சுவடிகளைத் தேர்ந்தெடுத்து, கொண்டுவந்து அப் படி யெடுப்போருக்குக் கொடுக்க வேண்டிய நிலை; எழுதுவதில் பிழைகள் கண்டு கூறினாலும் கண்டுகொள்ளாத நிலை; இவற்றை யெல்லாம் கடந்து அவர்களுக்கு உரிய கூலியை முறையாகப் பெற்றுத் தந்தாக வேண்டிய கட்டாயம்.

சுவடிப் பதிப்புகளை மேற்கொண்டபோது, வேறு நூலகங் களிலிருந்து சுவடிகளைப் பெற்று ஓப்பிட வாய்ப்பிருந்ததில்லை.

அருகில் பிற துறைகளில் இருந்த வல்லுநர்களிடம் சென்று

ஐயங்களை நீக்கிக் கொள்ளவும் அனுமதிப்பதில்லை; பதிப்பாசிரியர் அவருடைய இடத்தை விட்டுச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு. பதிப்புரை ஒரு பக்கத்திற்கு மிகக் கூடாது; சுவடியிலுள்ளதைத் தான் பதிப்பிக்க வேண்டும்; சொந்தச் செய்திகளுக்குப் பக்கங்கள் ஒதுக்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாடு. இத்தகு சிக்கல்கள் பல. எண்ணங்கள்

சிக்கல்கள் தோன்றுந்தோறுத் பலவகை எண்ணங்களுந் தோன்றின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/18&oldid=1571087" இலிருந்து மீள்விக்கப்பட்டது