உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

3

அச்சான நூல்களுக்குரிய வேறு சுவடிகள், இந்த நூலகத் திலுள்ளவை போன்ற வேறு சுவடிகள், பிற நூலகங்களிலுள்ளவை போன்ற சுவடிகள் ஆகியவற்றால் பயன் எதுவுமே இல்லையா? தெளிவில்லாத நிலையோடு, பிழைமலிந்த, சுவடிகளில் உள்ளவாறே படிக்க இயலாத நிலையுடைய பதிப்புகளை எல்லோரும் பயன் படுத்த முடியுமா? அவற்றால் ஏதேனும் பயன் உண்டோ? படி யெடுக்கும் செயல்கள் இவ்வாறே தொடரவேண்டுமா? விரிவான ஆய்வுரை, பதிப்புரைகள் என்பன சில எண்ணங்கள்.

அவசியமில்லையா?

பிற பட்டறிவுகள்

"பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே

ஆடுநர்க் கீத்த பேரன் பினனே

அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே

திறவொர் புகழ்ந்த திண்ணன் பினனே

என்னும் பாடலைப் பாடம் நடத்தியபோது இயைபுத் தொடை பொருந்தும் இப்பாடல் பல்புக ழினனே, ஆய்கோ லினனே என்றிருக்கவேண்டும்; ழி, லி என்பவற்றின் மேல் விலங்குகளை எழுத்துத் தொடர்ச்சியினால் ஏற்பட்ட கோடுகள் என நீக்கியும், னகரத்திற்குப் புள்ளியிட்டும் பதிப்பித்திருக்கின்றனர் என்று கருதினேன். தொல்காப்பிய மேற்கோளில்* இதே முறையில் பதிப்பிடப் பெற்றிருந்ததைக் கண்டபோது என் கருத்து வலி வுற்றது. இதனால் பிற நூல் சுவடிகளும் பதிப்புகளில் பயன்படும் என்ற அனுபவம் ஏற்பட்டது.

‘•ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் 6 தெரியும்... தமிழ்நூல் களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாத போது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது; பார்த்து எழுதுவ தாவது!’8

என்பன போன்ற செய்திகள் பதிப்புக் கலை முன்னோடிகளின் கருத்துக்களாகக் கிடைத்தன.

சுவடி இயல் பயிற்சி வகுப்பினைத் தொடங்கியபோது, மூல பாட ஆய்வியல், பதிப்புக் கலை என்னும் இரண்டு சிறுநூல்கள்

1.

புறநானூறு, 221.

2. தொல். பொருள், நூற்பா- 79, எடுத்துக்காட்டு. 3. நினைவு மஞ்சரி,பக்.9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/19&oldid=1571088" இலிருந்து மீள்விக்கப்பட்டது