உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

துணையாயின. முன்னோடிகளின் பதிப்புரைகள் தொகுக்க முடிந்தது.

கிடைத்தன.

சுவடி இயல் பலவற்றைத்

இவற்றாலும் பல செய்திகள், அனுபவங்கள்

இத்தகு நிகழ்ச்சிகளும் சிக்கல்களும் அனுபவங்களும் சேர்ந்து சுவடி இயல் ஓர் ஆய்வு' என்னும் இத்தலைப்பில் ஆய்வு செய்து, சுவடிப் பதிப்பில் நிலையான சில உண்மைகளைக் காணவேண்டும் என்ற முடிவை உருவாக்கின. வ அதன் விளைவாகத் தோன்றுவது

இந்த நூல்.

நூலின் அமைப்பு

சுவடிகளைப் பற்றிய செய்திகள், படியெடுப்பதற்குரிய ஆய்வு முறைகள், பதிப்பித்தற்குரிய வழிவகைகள் என்ற அடிப்படையில் இந்த நூல் சுவடி, ஆய்வு, பதிப்பு என்னும் மூன்று பெரும் பகுதி களாக அமைகிறது. உள்ளே அமையும் இயல்களும் உட்தலைப்பு களும் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன. நூலின் முழுஅமைப்பு பொருளடக்கத்தால் தெளிவாகும்.

செய்திகள்

நூலுள் சுவடி, வேறுபாடு, மூலபாடம், பதிப்பு, அச்சு ஆ. ஆகிய வற்றின் வரலாறுகள் மிகைப்படுத்தப் பெறவில்லை. சுவடி. படித்தல், பதிப்பித்தல். அச்சிடுதல் ஆகிய பயிற்சிகளையே முதன்மையாகக் கொண்டு அவற்றிற்கேற்ற அனுபவமிக்க கருத்து களே ஆய்ந்து தரப்படுகின்றன. பயிற்சிக்காகவும் அனுபவத்திற் காகவும் சான்றுகள் பலதிறப்பட்டவை காட்டப் பெற்றுள்ளன.

அச்சு முறைகளைக் கூறும் பகுதியில் 25 உறுப்புகளோடுகூடிய நூலின் அமைப்பு கூறப்படுகிறது. பிற நூல்களில் இவ்வமைப்புகள் கூறப்படுகின்றன. ஆயினும் நூலின் பல தன்மைகளை விளக்கும் நூலின் முழு அமைப்பைக் கூறவேண்டிய அவசியம் ஏற்

போது

பட்டது.

இதேபோல விருத்தப்பாவியல் என்னும் நூல் விருத்த வகைகளை விளக்குகிறது. சுவடிகளைப் படியெடுத்துப் பாடல் களை முறைப்படுத்த வேண்டிய செய்திகளை ஆய்ந்து காட்டும் போது விருத்தங்களைத் தவிர பிற பாக்களின் வகைகளையும் லிளக்க வேண்டியுள்ளது. வேறு நூலில் கூறப்பட்டது என்பதனால் விருத்த வகைகளை விட்டுப் பிற வகைகளை மட்டும் சான்றுடன் விளக்குவது நூலின் இப்பகுதி குறையாக இருக்கும் என்பதனால் விருந்த வகையும் சேர்க்கப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/20&oldid=1571089" இலிருந்து மீள்விக்கப்பட்டது