174
சுவடி இயல்
"யாவிராயினும்... யாம் பொருது மென்றல் ஓம்புமின்
(புறம்.88)
(தெவ்விர்) செம்மல் மூதூர் நுமக்குரித்தாகல் வேண்டில் சென் றவர்க்கு இறுக்கல் வேண்டும் திறையே" (புறம்.97) "போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை" (புறம். 104) செந்நாப் புலவீர்! (140) என்னும் பன்மைவிளி மேற்காட்டிய விளி நடையினை ஒத்தது என்னும் கருத்து கருத்து இப்பாடத்தேர்வுக்குத் துணைநிற்கிறது.
ஆ. புறச்சான்றுகள் ஆ
பிறநூல் தொடர்களால் மூலபாடத்தைத் தேர்ந்தெடுத்தல்
நூலின் அகச்சான்றுகளைத் துணையாகக் கொண்டு நான்கு முறைகளில் மூலபாடம் தேர்ந்தெடுக்கும் வழிகளைக் கண்டோம். பிறநூல் தொடர்கள், மேற்கோள்கள் ஆகிய இருவகைப்புறச் சான்றுகளின் துணைகொண்டும் மூலபாடங்களை உறுதிப்படுத்த லாம். அவற்றுள் முதலாவதாகப் பிறநூல் தொடர்கள் மூலபாடத் தேர்வுக்குத் துணையாகின்றன என்பதற்குச் சில சான்றுகளைக்
காட்டலாம்.
எலிப்படை-எலிப்பகை
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை நாகம் உயிர்ப்பக் கெடும்
(குறள். 763)
வேறு: 'ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்”
எலிப்படை, எலிப்பகை என்பன பாடங்கள்.
அதிகாரத்தில் வருவது இக்குறட்பா.
என்பன
ஊறு அஞ்சா வெல்படை' (761)
படைமாட்சி என்னும்
'தொலைவிடத்துத் தொல்படை' (762) 'வன்கண் அதுவே படை' (764)
'ஆற்றல் அதுவே படை' (765)
'எனநான்கே ஏமம் படைக்கு (766)
'படைத்தகையால் பாடு பெறும்' (768)
இல்ஆயின் வெல்லும் படை' (769)
அவ்வதிகாரத்துள்
ஆளப்பட்டுள்ள
தொடர்முறை.
மேலும், குகனது கூற்றாகப் பேசும் கம்பரின் வாக்காகிய