உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

சுவடி இயல் பாடல்களையும் மேற்கோளாகக் காட்டிவிளக்கினர். இவ்வாறான வழக்காற்றினால் ஒரு இலக்கியத்தின் பாடல் இலக்கண நூல்களி லும் பிற இலக்கியங்களிலும் ஒருபகுதியாகவோ முழுமையாகவோ இடம் பெற்றுவிட்டன. ஒரு குறிப்பிட்ட நூலைப் பதிப்பிக்குங்கால் காணப்படும் பல்வேறு பாட வேறுபாடுகளை ஆய்ந்து உண்மைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கப் பிறநூல்களில் காணப்படும் மேற் கோள்களாகிய குறிப்பிட்ட நூலின் பாடல்கள் புறச்சான்றுகளாக நின்று இரண்டாம் நிலையில் துணைபுரிகின்றன. இவ்வாறு மேற்

கோள் தொடர்களால் மூலபாடம் தேர்தெடுக்கப்படுகின்றன என்ப தற்குச் சில சான்றுகளைக் காட்டலாம்.

கண்டோர் கூறியது கண்டோர் செவிலிக்குச் சொல்லியது :

வேறு :

-

"செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது கண்டோர் செவிலிக்குச் சொல்லியது

குறுந்தொகைப் பாடலின் துறை விளக்கம் தரும் தொடர்கள் சுவடி களில் இவ்வாறு இருவகையாக வேறுபட்டுக் காணப்படுகின்றன. இக்குறுந்தொகைப்பாடலை மேற்கோளாக எடுத்துக்காட்டும்

போது,

'இஃது இடைச்

கோள்

சுரத்துக் குறும்பினுற்றோர் இவரைக்கண்டு ழைப்புற்றார்க்கு அவர் பெண்டிர் கூறியது. இவை செலவின்கண் கூறியது' என்று தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை சுட்டுகிறது. கண்டோர் அயிர்த்தற்குச் செய்யுள்' என்று ச்செய்யுளைக் காட்டுவர் அகப்பொருள் விளக்க உரைகாரர். தேரன் - தேரின்

மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்

வேறு :

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்"க

மாண்வினைத் தேரின்

உதுக்காண் தோன்றும் ...”

தேரன், தேரின் என்பன பாடங்கள். குறும் பொறை

நாடன்

தோன்றும் என்னும் முடிவினை உடையது இத்தொடர். தேரன், நாடன் தோன்றும் என்று இயைக்க, நாடன் தேரினை உடைய னாய்த் தோன்றும் என்று கொள்ள வேண்டும். ஆனால் தொல்

53.

54.

55. 56.

குறுந்தொகை, 7.

தொல். அகத்திணையியல், 40. நச்சினார்க்கினியர். தொல்காப்பியம். பொருள் 182 அகநானூறு, பா. 4.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/192&oldid=1571272" இலிருந்து மீள்விக்கப்பட்டது