உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

177

7

காப்பிய நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகக் காட்டப் படும் இவ்வடிகளில் தேரின் தோன்றும் என்றே காணப்படுகிறது. நாடன் தேரில் தோன்றும் என்று பொருள் கொள்ளும் எளிய நடையுடைய இத்தொடர் சிறப்புடையதாகிறது.

இ. ஆய்வுநிலையில் மூலபாடத்தை நிறுவுதல்

மூல

அகச்சான்று புறச்சான்றுகளின் துணை கொண்டு பாடத்தை நிறுவ இயலாத போது பொதுநிலையில் ஆய்ந்து தக்க பாடத்தை நிறுவ வேண்டியுள்ளது. இவ்வாய்வுக்குத் துணை நிற்பன சீர், தொடை, வகையுளி, அளபெடை முதலான யாப்பமைதிகளும் பிற இலக்கண அமைதிகளுமாகும். இத்துணைகளின் வழி சிறந்த பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் முறையைச் சில சான்றுகளால் விளக்கலாம்.

யாப்பு - சீரமைதியால் மூலபாடம் தேர்தல் புரத்தரரே-புரத்தாரே

வேறு :

"காடது அணிகலம் காரர வம்பதி காலதனில்... பீடது அணிமணி மாடப் பிரமபு ரத்தரரே55 பீடது அணிமணி மாடப் பிரமபு ரத்தாரே"

'பிரம புரததாரே' என்பது சுவடிகளில் காணப்பெறும் வரி வடிவம். இதனைப் பிரமபுரத்தரரே, பிரமபுரத்தாரே என்னும் இரண்டுவடிவத்தாலும் எழுதலாம். முதலில் பிரமபுரத்தாரே என்று பிழையாகப் படித்து விட்டதனால் அப்பாடமே நிலைத்துவிட்டது. பல பதிப்புகளிலும் அச்சாகிவிட்டது. மேலும் ஒசைகுறைதலோ ஏற்படவில்லை என்பதும் காரணமாகிறது. ஆனால் பாடலுக்கேற்ற சீர் அமைதி நோக்கி ஆய்ந்துபார்க்க, 'பிரம புரத்தரரே' என்பதே சரியான பாடமாகிறது.அச்சீர் அமைதி யினைச் சுருக்கமாக விளக்கலாம்.

பொருட் சிதைவோ

காட தணிகலங் காரர வம்பதி காலதனில்

பீட த ணிமணி மாடப் பிரம புரத்தாரே

இவற்றின் முதலடியில்

உள்ளன.

ஒற்று நீக்கிப் பதினாறு எழுத்துக்கள் இவ்வடியைப் போலவே அடுத்த இரண்டடிகளும் அமை

57. தொல். அகத்திணை. 55.

58.

சுவ.

சம்பந்தர் தேவாரம், 1159.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/193&oldid=1571273" இலிருந்து மீள்விக்கப்பட்டது