உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

181

படுகிறது. மூன்று அல்லது முன்றின் என்பதை அடிப்படைச் சொல்லாகக் கொள்ளவேண்டும். ஏழன் உருபு சேர்ந்து வந்துள்ளது. இச்சொற்களுள் எதுவும் பொருள் தருவதாக

இல்லை. ஓசை நயமும் வேறுபடவில்லை. முன்றில் என்பதே முன்றினில் எனச்சிதைந்திருக்க வேண்டுமாதலின் முன்றில் என்பதே பொருத்தமுடைய பாடமாகிறது.

னகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

வேறு :

"இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி

ளையவள் பயந்தனள் இளைய மென்கொடி"

இளையவன்-பயந்தனள்-என்னும் புணர்ச்சியில் னகர விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே”

இளைய மென் இலக்குவனைப் இளையவள் கொண்டால் இளையமென்

என்னும் விதிப்படி னகரம் றகரமாகத் திரிந்தது. கொடியாகிய சுமித்திரை இளையவனாகிய பெற்றெடுத்தாள் என்பது இவ்வடி தரும் பொருள். பயந்தனள் என்பதைப் பாடமாகக் கொண்டால் கொடி இளையவள் பயந்தனள் என்றாகி பெண்பாற்குழந்தையைச் சுட்டுவதாகிவிடும். எனவே இளையவற் பயந்தனள் என்பதையே

பாடமாக ஏற்கமுடிகிறது.

ஒருமை-பன்மை - ஆண்பாலுள்

வேறு:

"வந்த நம்பியைத் தம்பி தன்னொடும் முந்தை நான்மறை முனிக்குக் காட்டிநல் தந்தை நீதனித் தாயு நீயிவர்க்கு”

"தந்தை நீதனித் தாயு நீயிவற்கு" இவர்+கு-இவர்க்கு; இவன் + கு இவற்கு என்பன பெயர்ச் சொல்லொடு கு உருபு புணர்ந்து நிற்கும் சொற்களாகும். இவர்க்கு என்பது பன்மைச் சொல்; இவற்கு என்பது ஆண்பால் ஒருமைச் சொல். இரண்டும் கு உருபு ருபு ஏற்றுவந்தன. கம்பர் பாடலுள் அங்குவந்த நம்பியாகிய இராமனை அவன் இளவல் இலக்கு வனோடு சேர்த்துக் கௌசிக முனிவனிடம் காட்டிய தசரதன், முனிவரை நோக்கி இவர்களுக்குத் (இவர்கள் இருவருக்கும்) தந்தையும் தாயும் நீயே யாவாய் என்று கூறினான் என்பது இவ்

வ்

64. கம்ப பாலகாண்டம்,5;105. 65.தொல்.எழுத்து,333, 63. கம்ப. பாலகாண்டம்,6:17,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/197&oldid=1571277" இலிருந்து மீள்விக்கப்பட்டது